பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii புலமையை எய்தி கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்றவர். புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி" என்ற திங்கள் இதழின் துணையாசிரியராகவும் (1947-48), முத்து என்ற சிறுவர் இதழின் ஆசிரியராகவும் (1948), சென்னையி லிருந்து வெளிவந்த் தென்றல் என்ற வார இதழின் துணை யாசிரியராகவும் (1989.60), இளந்தமிழன்’ என்ற இலக்கியத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் (1972-74) பணி பாற்றியவர். இந்த அநுபவமே இவரை நிரந்தரமாக அச்சுத் தொழிலில் தள்ளிவிட்டது. நகரத்தார் வாழ்க்கை திரைகடலோடியும் திரவியம் தேடு' என்று இருந்தாலும் சமய வாழ்வும், தமிழ்ப் பண்பாடும் அவர்தம் மூச்சாக இருந்து வருவதைக் காரைக் குடியில் பத்தாண்டுக்காலம் பணியாற்றிய காலத்தில் நன்கு அறிய முடிந்தது. பண்பாட்டின் உருவமாகத் திகழும் நாரா, நா. அவர்கள் குழந்தை எழுத்தாளர் சங்கம், சைவ &#33Iristi Quq5l06, pib, Dravidian Linguistic Assiociation என்பவற்றின் வாழ்நாள் உறுப்பினராகவும், தமிழ்க் கவிஞர் மன்றம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை இவற்றின் சிறப்பு உறுப்பினராகவும் இருந்து பணியாற்றுபவர். பர்மாவில் இருந்தபோது இரங்கூன் நகரத்திலுள்ள அகில பர்மா தமிழ்ச் சங்கத்தின் மேலாளராகவும் (1952): இரங்கூன் பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் (1954) பணியாற்றியவர். விரைந்து கவிபாடும் வேந்தராகத் திகழும் நாரா. நா. அவர்கள் காளி கோயில்’, நீளமூக்கு நெடுமாறன், ஒட்டுக்குடுமிப் பட்டுச்சாமி முதலிய 36 சிறுவர் கதை நூல் களும்; சிறுவர் பாட்டு’, மழலைச் சோலை', 'பாடு பாப்பா முதலிய 10 சிறுவர் பாடல் நூல்களும்; மோகனக் கிளி, "புதுவைக் கள்ளன் முதலிய 6 புதின நூல்களும்; நாச்சியப்பன் பாடல்கள் தொகுதி . 1, 2, ..கொய்யாக் காதல்’, ‘ஈரோட்டுத் தாத்தா முதலிய 7 கவிதை நூல் களும்; நான்கு பார்வைகளில் பாரதிதாசன், குயிலும் சஞ்சீவி பர்வதத்தின் சாரலும் என்ற 2 திறனாய்வு நூல்களும்; கடல் வீரன்", மூன்று திங்களில் அச்சுத் தொழில் போன்ற 4 பிறநூல்களும் எழுதி வெளியிட்டவர். இத்தகைய பெருமை வாய்ந்த கவிஞர் நாரா. நா. ஆவர்கள் எட்டு ஆழ்வாரைப் பற்றிய இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரப் பாமாலை வழங்கிச் சிற்ப்பிக்கும்