பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இருவர்களும் திருடர்களே
நாடக பாத்திரங்கள்

சிகந்தர் ஓர் அரசன்

திருடன்
முதற்காட்சி
இடம்:அரசனின் கூடாரத்திகெதிர். அரசனுக்கு முன்பாக

பயங்கரமான முறட்டுத் திருடன் ஒருவனே கை கால்களில்

விலங்கைப் பூட்டி சேவகர்கள் கொண்டுவந்து விற்க வைக்கின்றினர்.

அ. ஆஹா! உனது திய தொழில்களப்பற்றி நான் அதிக மாய் கேள்விபட்டிருக்கிற தேசியத் திருடன் நீ தானு? தி.நான் ஒரு தேசியன்-ஒரு படைவீரன்! - அ.படைவீரன் -திருடன்-கொள்ளையடிப்பவன்!-கொலக் காரப்பாவி தேசத்தையெல்லாம் பாழாக்கியவன்!-உன்னுடைய தைரியத்தை நான் மெச்சியபோதிலும் உனது துர் நடத்தையை வெறுத்து, அதற்காக உன்னை நான் தண்டிக்க வேண்டும். . தி.நீர் இவ்வாறு குற்றங் கூற, நான் என்ன செய்தேன்? அ. என்னுடைய ஆக்ஞையை யெல்லாம் நீ அலட்சியம் செய்யவில்லையா? ஜனங்களுடைய அமைதியை அழிக்க வில்லையா? உன்னுடன் வசிக்கும் பிரஜைகளின் உட்ம்பு களையும் உடமைகளையும் கெடுப்பதில் உன் காலத்தைக் கழீக்கவீல்லையா? தி. அரசனே! நான் உமது கைதி-நீர் சொல்வதையெல் லாம் நான் கேட்கவேண்டியவனே! நீர் விதிக்கும் தண் டினேயைப் பொறுக்க வேண்டியவனே! ஆயினும் எனது ஆன்மா உம்மால் ஜெயிக்கப்படவில்லை. ஆகவே நீர் கூறும் கடுமொழிகளுக்கு உத்திரவு சொல்வதென்ருல், சர்வ சுதந்திரமுடைய ஒருவனைப்போல் பதில் சொல்ல உத்திரவு கொடுக்கவேண்டும்.