பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

இருவர்கலும் திருடர்களே


அ.தாராளமாய்ப் பதில் உரை-நான் யாருடன் வார்த்தை யாட இசைகிறேனே, அவர்களே, என் சக்தியைக் கொண்டு மெளனமாயிருக்கும்படி அடக்க நான் விரும் பேன். தி.ஆயின்-உமது கேள்விக்குப்பதில் மற்ருெரு கேள்வி யால் உரைக்கவேண்டும். தாங்கள் உங்களது ஆயுட் காலத்தை எப்படி கழித்தீர்கள் இதுவரையில் ? அ.பெயர்பெற்ற சுத்த விரனப்போல்!-போர்வீரர்களுள் ஒப்புயர்வற்ற போர்வீரன், அரசைர்களுள் உத்தமனை அரசன், அயல் காட்டரசிர்க யல்லாம் அடக்கியாண் டவர்களுக்குள் அதிபராக்கிரிம்சாலி! என்று என் புகழ் உலகெங்கும் பரவியிருக்கிறது! கேட்டுப்பார்! தி.என்னுடைய புகழும் கொஞ்சம் பரவியிருக்கிறது! கேட்டுப்பாரும். தன்னுடைய.சிறு படையை என்னைவிட அதிக தைரியமாய் நடத்திய போர்வீரனே நீர் கண்ட துண்டா?-என்னேவிட-என்னையே நான் புகழ்ந்து கொள்வது கியாயமன்று. நீரே என்ருயறிவீர், என்னே ஜெயிப்பதற்கு நீர் எவ்வளவு கஷடப்பட்டீரென்று! அ.எப்படியிருந்த போதிலும் ஒரு கொலக்கஞ்சா திரு டன் தானே!-மானமில்லா நாணயங்கெட்ட, கொள்ளைக் காரன் தானே! தி.தேசங்களை யெல்லாம் வெல்லும் வெற்றிவீரன் மாத்தி ரம் என்ன? எங்கணும் கேடுவிளேக்கும் பிசாசுகளைப் போல் உலகெங்கும் திரிந்து, சுகமாய் வாழ்ந்துகொண்டி, ருந்தவர்களின் அமைதியை யெல்லாம் அழித்து, அவர் களது வியவசாயத்தை யெல்லாம் பாழாக்கி, சட்ட மின்றி, நியாயமின்றி, எல்லோரையும் கொள்ளையடித் துக் கொன்று, துவம்சப்படுத்த வில்லையா? இவ்வளவும் எதற்காக? உலகிலுள்ள தேசங்களை யெல்லாம் அடக்கி ஆளவேண்டும் என்னும் அடங்கா உமது பேர் ஆசை யின் பொருட்டு நூறு ஆட்களுடன் நான் சில ஜில்லாக் களுக்கு செய்ததை எல்லாம், நீர் நூறு ஆயிரம் சைனி யத்துடன் பல தேசங்களுக்குச் செய்தீர். நான் சில மணி தர்களுடைய சொத்துக்களே அபகரித்தால், ர்ே பல அர சர்களேயும் அரச குமாரர்களேயும் அழித்திருக்கிறீர்.