பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கான நாதனும் அவனது அமைச்சர்களும்


கா. உம்! -ஏனேயா மந்திரிகளே ! ஆர்கலியானது என் ஆக் கினைப்படி அடங்கி நடக்கிறதா? அது என் பிரஜையானுஇல்-மிகுந்த ராஜத்துரோகியான பிரஜையா யிருக் கிறது! இதோ பாருங்கள்-எப்படி உயர எழும்பி, கோபத்துடன் தன் நுரையையும் உப்பு ஜலத்தையும் என்மீது வீசுகிறது, அரசனென்றும் பாராமல் அவமரி யாதையுடன்!-முகமன் கூறும் மடையர்களே ! உங்கள் பொய்யான வார்த்தைகளால் நான் மோசம் போவேன் என்று எண்ணினர்களா ? உங்கள் முகஸ்துதியை முற்றி லும் நம்பினேன் என்று மதித்தீர்களா? இப்பொழுதா வது தெரிந்து கொள்ளுங்கள். இந்த சாகரமானது ஒப் புயர்வற்ற ஒருவருக்குத்தான் கீழ்ப்படிந்து கடக்கும் அவர் தான் திரிலோகங்களுக்கும் நாதன்-அரசர்களுக் கெல்லாம் அரசன் சக்ரவர்த்திகளுக்கெல்லாம் சக்கர வர்த்தி அவர் ஒருவர் தான் சமுத்திரத்தைப் பார்த்து இவ்வளவு தூரம்தான் கீபோகக்கூடும்-இதற்குமேல் போகக் கூடாது, கர்வம் பிடித்த உனது அலைகள் இதைக் கடந்து செல்லலாகாது' என்று கூற சக்தி யுடையவர். அரசன் என்பவன் ஒரு மனிதனே ! அற்ப மனிதன்! புழுவிற்குச் சமானம்! ஆகவே அற்ப புழுவொன்று, அகிலத்தையும் சிருஷ்டித்து அடக்கி யாளும், அரனர் சக்தியை தான் உடையதாக எண்ணி, ஐம்பெரும் பூதங்கள் தன் ஆக்கினேக்கு உட்படும் என்று நினைக்கலாமா?-இதோ இந்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு போங்கள்-இதை நான் அணிய மாட்டேன். உலகிலுள்ள அரசர்களெல்லாம், இந்த என் அனுபவத் தைக் கொண்டு கர்வமின்றி கீழ்ப்படிந்திருப்பார்களாக நீங்கள் பட்ட அவமானத்தினுல் மந்திரிகளெல்லாம் உண்மையை அறிவார்களா.

காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று