பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ லவிான் 39. கா. ஆன-இந்த அப்பங்கள்ளாம் பாளுவுலே வேவுதுங்க, 母雷。 அதுங்களெ பாத்துகட்டும், நான்போய் பால் கறக்க இம். கானுபோய் அந்த கட்டைங்களை யெல்லாம் அடுக்க ரேன்-சாப்பாடு ஆவத்தான் கொஞ்சம் காழி ஆவுமே. (போகிருன்.) அப்பா, தம்பி! இந்த அப்பங்கள்ளாம் கருகிப் போவப் போவுது, அப்பப்போ திருப்பிகினே இருக்கணும். நீங்கள் சொன்னபடி செய்கிறேன். (காந்தாரி போகிருள்.) அந்தோ! எனக்காக எவ்வளவு வேண்டுமென்ருலும் பொறுப்பேன், ஆயினும் துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருக்கும் சிங்களமே! உன் கதியைக் கருதும்போது என்மனம் பதைபதைக்கிறது: என் இருதயம் வெடித்துப்போகும் போலிருக்கிறது. கிழக்கு முதல் மேற்குவரை இத் தீபத் திலுள்ள நதிகளெல்லாம் ரத்தப்பிரவாகத்தால் ஓடுகின் றன என் சுத்தவிரர்களெல்லாம் சின்ன பின்னமாக வெட்டப்பட்டார்கள்; என் எளிய பிரஜைகளில் சிலர் கொல்லப்பட்டனர்-இன்னும் சிலர் தங்கள் விடுகளி லிருந்து அணிமணிகளே யெல்லாம் இழந்து, அவமானப் படுத்தப்பட்டு-அடிக்கப்பட்டு வெளியே துரத்தப்பட் டனர்! அவர்களே யெல்லாம் காப்பாற்றும்பொருட்டு ஐக தீசன் என்னை அவர்களுக்கு அரசகை ஏற்படுத்தியும், இந்தப் படுபாவிகள் அவர்களைப் பாழாக்காதபடி காக்க வகையற்றவன யிருக்கிறேன். கருணைக்கடவுளே! தான வர்களின் வாளுக்கு இரையாகாதபடி இங்காட்டைக் காக்க எனக்கு யோக்கியதையில்லாவிட்டால், என்னே விட மேலாகப்போர்புரிந்து, வெற்றியடையக் கூடின ஓர் சுத்த வீரனே சிருஷ்டித்தருளும் இக்காட்டிற்கு-நான் இங்கேயே இச்சிறு குடிசையில், இழிதொழில் புரிந்து, என் நாட்களைக் கழிக்கிறேன். எப்படியாவது சிங்களம் சந்துஷ்டி யடைந்தால் போது மெனக்கு-ஒ!-இதோ வருகிருர்கள் எனக்கு விருந்தளிக்கும் புருஷனும் பெண் சாதியும்.