பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடதட கும்பக் களிறு

உலகத்திற்கு விளக்கப்படுவதுபோல, விநாயகர் சிவபெருமானது தேரின் அச்சை ஒரு சமயம் முறித்துவிட்டார். அச்சிறுப்பாக்கம் என்று ஒர் ஊர் இருக்கிறது. திரிபுர சங்காரம் செய்வதற்காகச் சிவபெருமான் புறப்பட்டபோது தம்மை வணங்காமற் சென்றமையால் அவரது தேரின் அச்சை முறித்து விட்டார் விநாயகர். அச்சு இற்ற பாக்கமே அச்சிறுபாக்கம். சட்டத்தை உண்டுபண்ணினவனாலும் சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்பது தர்மம். அந்தத் தர்மத்தைச் சிவனே இத்திருவிளையாடலால் காட்டினான்.

தடபடெனப் படு குட்டு

விநாயகரைக் களிறு என்று சொன்னார். அந்த களிறு எத்தகையது? "வருவார் தலையில் தடபடெனப்படு குட்டுடன், சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிறு" என்று மூன்று இலக்கணங்கள் கூறுகிறார். தடபடெனப்படு குட்டை ஏற்றுக் கொள்ளும் களிறு அது, சர்க்கரை மொக்கிய கையை உடைய களிறு, கடதட கும்பக் களிறு. .

முதல் இரண்டும் விநாயகர் செய்கின்ற காரியத்தைச் சொல்வது. குட்டைப் பெற்றுக் கொண்டு சர்க்கரையை ஏந்தியிருக்கிறார். இறைவன் சந்நிதானத்திற்குப் போகும்போது மக்கள் பணிவாகப் போக வேண்டும். நம்மிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று சில சமயங்களில் இறுமாந்து இருக்கிறோம். அப்படித் தலைநிமிர்ந்து நடக்கும்போது தலையில் குட்டு விழுகிறது. நாம் உயர்ந்தோம் என்று எண்ணித் தலை நிமிர்ந்து போகும்போது யாராவது நம் தலையில் குட்டி உட்கார வைத்து விடுகிறார்கள். நாமே தலை குனிந்து போய்விட்டால் நம்மைப் பிறர் குட்ட வேண்டிய அவசியம் இருக்காது.


   "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்"
என்று திருவள்ளுர் சொல்லுகிறார். "ஏழைகளே பிறருக்குப் பணிந்து போக வேண்டும். பணக்காரர்களாகிய நாங்களுமா, அறிவுடையவர்களாகிய நாங்களுமா, பிறருக்குப் பணிந்து போக வேண்டும்?" என்று சிலர் கேட்கலாம். "எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்பதிலுள்ள எல்லார்க்கும் என்ற வார்த்தை எங்களையுமா

க.சொ.1-4

41