பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



2. அதேபோல் உட்காரும் பொழுது இடதுகாலை பக்கவாட்டில் (Sideward) வைத்து உட்காரவேண்டும்.

3. அதேபோல், உட்காரும் பொழுது இடதுகாலைப் பின்புறமாக (Backward) வைத்து உட்காரவேண்டும்.

4. நின்று செய்யும் பஸ்கி முறையில், துள்ளிக் கீழே உட்காரும்பொழுது, வலதுகால் வைக்கும் இடத்தில் இடது காலையும் இடதுகால் இருக்கும் இடத்தில் வலதுகாலையும் வைத்து, அதாவது குறுக்கு நெடுக்காக வைத்து, முன் பாதங்களில் அமரவேண்டும். கைகள் பக்கவாட்டில் வந்து, தோள் பட்டையில் வைக்கப்படல் வேண்டும்.

பின்னர் மீண்டும் நின்ற நிலைக்கே துள்ளி எழ வேண்டும்.

2. முழங்காலில் செய்யும் பஸ்கிகள் (Kneeling Baithaks)

தொடங்கும் நிலை:

தோள்களின் அகலம் இருக்கும் அளவுக்கு முழங்கால்களை வைத்து உட்காருகின்ற அமைப்பு இருக்க வேண்டும். இடைவெளியின் அகலம் 10 அங்குலத்திலிருந்து 12 அங்குலம்வரை இருக்கலாம்.

உள்ளங்கைகளை ஒவ்வொரு முழங்காலுக்கும் முன்னே தரையில் வைத்து, நெஞ்சை நேராக நிமிர்த்தி, நேர்கொண்ட