பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 65


உணர்ச்சிதான். உடலுறுப்புகளை சிலிர்க்க வைக்கும் இந்த உணர்ச்சி இல்லாத மனிதன் உயிரற்றவன். மனித அறிவுக்கு அப்பாற்பட்டதொரு சக்தியே இந்த உலகத்தின் அழகு வடிவமாகவும், அறிவுச் சிகரமாகவும் வியாபித்திருக்கிறது. இந்த உணர்வு, இந்த அனுபவம், மனிதனுக்கு உருவாகுமானால், அதுவே அவனுடைய உண்மையான மதக்கொள்கையின் மையமாகும்.

வேறொரு சந்தர்ப்பத்தில் ஐன்ஸ்டைன் குறிப்பிடும் போது, “உலகத்தில் மிகப்பெரிய மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று இருப்பதை உணரும் அனுபவம்தான். அறிவியலின் ஆராய்ச்சியின் பெரும்பலமான உயர்ந்த ஒர் ஊன்றுகோல்” ஒழுங்கும், ஒருமைப்பாடும் நிறைந்திருக்கும் இந்த உலகத்தின் மர்மங்களை ஆராயும் பெரும்பாலான விஞ்ஞானிகள், ‘கடவுள்’ என்ற சொல்லைப் புறக்கணிக்க எண்ணுகின்றார்கள்.

ஆனால், நாத்திகர் என்று கூறப்படும் ஐன்ஸ்டைன் இதுபோன்ற விருப்பு-வெறுப்பு உணர்ச்சிகளுக்கு அடிமையானவர் அல்லர்.

சாதாரணமாக, பெளதிக உண்மைகளை ஆராய முற்படும் எந்த ஒரு விஞ்ஞானியும் தெய்வ நம்பிக்கை அற்றவராகத்தான் இருப்பார் என்ற எண்ணம், சிந்தனை எக்காலத்திலும் மலிந்து காணப்படுகின்றது. ஆனால், இந்தக் கொள்கைக்கு ஐன்ஸ்டைன் ஒரு விதிவிலக்காக விளங்குகிறார்.

அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் இதுபற்றி கூறுகையில், “என்னுடைய சமையம் அதாவது மதம், நமது அற்ப ஆற்றலைப் பெற்றிருக்கும் புலன்களால் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண விளக்கங்களின் மூலம் தன்னை