பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அயில்வேலன் கவி

வற்றைப் பிறருக்கு வெகு நன்றாகச் சொல்ல வேண்டு மென்று படித்தார். பிறருக்கு உபந்நியாசம் செய்தார். ஒரு நாள் அரசனிடம் சென்று, "பாகவதத்தை ஒரு முறை மகாராஜாவுக்கு முன் சொல்ல ஆசைப்படுகிறேன்" என்றார்.

அரசன் அவரைப் பார்த்து, "பாகவதத்தை நீங்கள் நன்றாகப் படித்திருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஒ, மிக நன்றாகப் படித்திருக்கிறேனே!" என்று அவர் சொன்னார்.

அரசன் அவரைப் பார்த்து, "இன்னும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள், பார்ப்போம்" என்று சொல்லி அனுப்பி விட்டான்.

"அரசன் இப்படிச் சொல்லுகிறானே!" என எண்ணிக் கோபம் கொண்ட பெளராணிகர் அதனைக் காட்டிக் கொள்ளாமல் மறுபடியும் சென்று ஒரு முறை படித்துவிட்டு அரசருடைய தர்பாருக்கு வந்தார்.

அரசன் முன்போலவே, "நன்றாகப் படித்துவிட்டு வந்தீர்களா?" என்று கேட்டதற்கு, அவர் முன்போலவே, "மிகவும் நன்றாகப் படித்து வந்திருக்கிறேன்" என்று விடை சொன்னார். அரசன் அவரிடம் மறுபடியும், "இன்னொரு முறை படித்துவிட்டு வாருங்கள். படித்தது போதாதென்று தோன்றுகிறது" என்று சொல்லி அனுப்பிவிட்டான்.

இவ்வாறே ஒவ்வொரு வாரமும் அந்தப் பெளராணிகர் அரசனுடைய தர்பாருக்குச் சென்று, "நான் மிகவும் நன்றாகப் படித்துவிட்டு வந்திருக்கிறேன்" என்று சொல்வதும், அரசன் அவரை, "திரும்பவும் போய்ப் படித்துவிட்டு வாருங்கள்" என்று சொல்வதும் வழக்கமாகி விட்டன. பெளராணிகருக்கு அளவற்ற கோபம் வந்து விட்டது. இனி மிக நன்றாகப் படிக்காமல் அரசனுடைய தர்பாருக்குப் போகக் கூடாதென்று எண்ணி மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். ஒரு முறை படித்தார். பல முறை படித்தார். மனம் ஊன்றிக் கவனித்துப் படித்தார். அரசனுக்குச் சொல்ல வேண்டும் என்பதை மறந்து படித்தார். படிக்கப் படிக்க அவர் உள்ளம் அதில் ஆழ்ந்தது. கண்ணன்

79