பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

வெள்ளை யானையாகிய ஐராவதம் சுமந்து வந்த தேவ யானையை முருகனுக்கு அர்ப்பணம் செய்தான். யுத்த காலத்தில் தேவசேனாபதியாக இருந்தான் முருகன்; அமரர் படைத் தலைவனாக நின்று போராற்றினான். போர் முடிந்தவுடனேயே, தேவசேனையின் பதியாக ஆனான். இது முதல் கல்யாணம். ஆனால் அதற்கு அடுத்தபடியாகக் கந்த புராணத்தின் முடிவில் கச்சியப்ப சிவாசாரியார் வள்ளியெம்பெருமாட்டியின் திருமணத்தை வைக்கிறார்.

நம் ஊரில் ஒருவர் இருக்கிறார். வேறு ஊரிலிருந்தும் ஒருவர் வருகிறார். இருவரும் சபையில் பேசுகிறார்கள்; என்றாலும் நம் ஊர்ப் புலவர் பேசியதைப் பற்றியே பெருமையாக நினைப்பது இயல்பு. தேவகுஞ்சரி தேவர்கள் பட்டணத்தில் இருந்தவள்; வள்ளியம்மையோ நம்மைப்போல இந்த உலகத்தில் இருந்தவள். நம்மைப் போலவே இந்த உலகத்தில் ஒன்றும் அறியாத பேதைப் பெண்ணாக இருந்த அவளுக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்தது. அவளை எம்பெருமான் இங்கே வந்து மணந்து கொண்டான். அது சிறப்பான விஷயம் அல்லவா? அதோடு நமக்கும் அப்படிப்பட்ட பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அந்த வரலாறு உண்டாக்குகிறது. கிம்பர்லியில் தங்கம் கிடைக்கிறது என்றால் அது நமக்குக் கதையாக இருக்கிறது; அது நமக்கு பள்ளிக்கூடப் பாடம். ஆனால் நெய்வேலியில் நிலக்கரி கிடைக்கிறது என்றால் உடனே மகிழ்வு எய்துகிறோம்; இந்த ராஜ்யத்தின் பொருளாதார வாழ்வு சிறப்படையும் என்று மகிழ்கிறோம். அதுபோலவே தேவயானையை முருகப் பெருமான் மணந்து கொண்டதனால் வாழ்வு பெற்றவர்கள் தேவர்கள். ஆனால் நமது ஊரில் பிறந்த வள்ளியெம்பெருமாட்டியை முருகன் மணந்து கொண்ட செய்தியைக் கேட்டால் நமக்கும் வாழ்வு உண்டென்று நம்பத் தோன்றுகிறது. நமக்கும் அவனுக்குமுள்ள உறவு அதிலிருந்து மிகுதியாகிறது. ஆகவே வள்ளி திருமணமாகிய பயனோடு கந்தபுராணம் முடிகிறது.

சிவபிரான் கண்களிலிருந்து உண்டான பெருமான், திருந்தப் புவனங்கள் ஈன்ற பிராட்டியின் பாலை அருந்திய பிரான், சரவணப் பூந்தொட்டிலில் விளையாடிய பெருமான், சூரன் முதலிய அசுரர்களைச் சங்கரித்த பெருமான், தேவேந்திர லோகத்தை தேவர்களுக்கே திரும்பவும் மீட்டுக் கொடுத்துத்

193