பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பித்துப் பிடித்தவன்தனக்குத்தானே தீங்கு தேடுவதைப் போலப் பிரமம் பிடித்தவன் வஞ்சனைக்குள் கட்டுப்பட்டிருக்கிறான். அதனின்றும் விடுபட வேண்டும் என்று எண்ணினாலும் பழக்க மிகுதியால் விடுபட முடிவதில்லை. கரடியைக் கம்பளியென்று ஆற்றில் குதித்தவன் கதையாக வஞ்சனை இயல்பு இறுக்கிப் பிணித்து ஆழ்த்துகிறது.

அசட்டுச் செயல்

ந்த வஞ்சனையின் விளைவுதான் நாம் செய்யும் அசட்டுக் காரியங்கள். அசட்டுக் கிரியைகளைச் செய்து தவிக்கிறோம். நாம் துன்பப்படுவதற்கு ஏதுவாக இருக்கும் செயல்களை அசட்டுக் கிரியைகள் என்பதில் தவறு என்ன? அசடு என்று அறியாமை உடையவர்களை நாம் கூறுகிறோம். புத்திசாலி அல்லாதவன் அசடு. ப்ரமத்திலிருந்து உண்டான சளத்தின் விளைவு அசட்டுச் செயல்.

நாம் செய்யும் காரியம் ஒன்றா, இரண்டா? மதுரையில் எம்பெருமான் அறுபத்துநாலு திருவிளையாடல்களைப் புரிந்தான் என்று திருவிளையாடற் புராணம் சொல்கிறது. நாமோ ஒரே நாளில் 640 திருவிளையாடல்களைச் செய்கிறோம். ஒன்றையேனும் உருப்படியாக, பயன் உள்ளதாக, செய்கிறோமா? அதுதான் இல்லை. ப்ரமத்தின் விளைவில் என்ன நன்மை இருக்கும்? "நாம் என்ன காரியம் செய்தோம்? அதனால் என்ன பயன் உண்டாகும்?" என்று நினைத்துப் பார்த்தால் நமக்கே நம்முடைய அறியாமை புலனாகும்.

அசடு என்ற சொல் எப்படி வந்தது? அசத்து என்பதே அசடு என்று திரிந்தது? சத்து அல்லாதது அசத்து. சத்து என்பது உண்மை; மெய்ப்பொருள். அசத்து, உண்மை அல்லாதது; பொருள் அல்லாதது. மெய்ப்பொருளில் நாட்டமின்றிச் செய்யும் அசட்டுக் காரியங்கள்.

"அசட்டர்கள் ஐவரை அறுவர் ஆக்கிய
வசிட்டன்"

என்று கம்பர் சொல்கிறார். ஐந்து பேரை ஆறு பேர் ஆக்கினார் என்று ஒரு பொருள் தோன்றச் சொல்கிறார். ஐந்து பொறிகளாகிய அசட்டர்களை அற்றவர் ஆக்கினார் வசிட்டர். அவர் பொறிகளை அடக்கினவர்; இந்திரிய நிக்கிரகம் செய்தவர். அங்கே 'பொருளல்ல

21B