பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

போலவே இருக்கிறது. அதை எடுத்துப் போய்க் கடையில் காட்டினான். அவனுக்குக் கடைக்காரன் தினை அளந்து போட்டான். அதை அவன் வீட்டுக்குக் கொணர்ந்து குத்திப் புடைத்துச் சோறாக்கித் தின்றான். ஒவ்வொரு தடவையும் கடைக்காரன் அவனுக்குத் தினைதான் கொடுத்தான். ஆனால் வேறு ஒருவனுக்கு நல்ல சம்பா அரிசியைக் கொடுத்தான். அதைக் கண்டு இவனுக்கும் சம்பா அரிசி சாப்பிட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. கடைக்காரனைப் பார்த்து, "எனக்கும் சம்பா நெல்லே போடு" என்றான். அதற்கு அவன், "இந்தக் காசில் தினை கொடுக்கும்படி எழுதியிருக்கிறது. காசை மாற்றி வா. உனக்கு நெல் கொடுக்கிறேன்" என்று சொன்னான். "அப்படியானால் அந்தக் காசை யார் கொடுப்பார்கள்?" என்று இவன் கேட்டான். "இந்தக் காசை உனக்கு யார் கொடுத்தாரோ, அவரே அந்தக் காசையும் கொடுப்பார்" என்று அவன் சொன்னான். இவன் ஒடோடியும் சென்று அந்த அதிகாரியிடம் கேட்கிறான்.

"நேற்றுக் கொடுத்த பணம்-முருகா
நெல்லுக்குச் செல்லவில்லை - அதை
மாற்றித் தாருங்காணும்"

என்கிறான். இதன் கருத்து என்ன? "என்னுடைய மனத்தில் உள்ள தீமை போய்ச்சத்துவ குணம் வர வேண்டும். ராஜஸ்தமோ குண மனத்தினால் இன்பம் பெற முடியாது. இப்பொழுதுள்ள மனத்தைக் கொண்டு நல்ல அநுபவம் பெறுவதற்குரிய முயற்சி செய்ய முடியவில்லை. இதை நீ எடுத்துக் கொண்டு நல்ல மனம் தா என்பதையே அந்தப் பரதேசி பாட்டுச் சொல்கிறது.

இந்தப் பாட்டில் வரும் நெல் என்பது திருவருட் போகம். உலகத்தில் மக்கள் எல்லாம் ஐம்பொறிகளின் வழியே இன்பத்தை நுகர்ந்து நடத்துகின்ற வாழ்க்கை, தினைச் சோற்றைப் போன்றது. அதை உண்ணும்போது அதைப் பறித்துக் கொள்ள யாராவது வந்துவிடப் போகிறார்களே என்று கல்லை எடுத்து அடித்துக் காவல் புரிகிறார்கள். எந்தப் பொருளினிடத்திலும் நமக்குப் பற்று உண்டானால் உடனே பகையும் வரும். எல்லாத் துன்பங்களுக்கும் மூல காரணமாக இருக்கிறது அவா. ஒரு பொருளினிடம் ஆசை பிறந்துவிட்டால், அந்தப் பொருளை இச்சிக்கிற பிறரிடம்

198