பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

மரியாதை உள்ளவர்கள் நம் வீட்டுக்கு வந்தால் அவர்களை நாம் உயர்ந்த ஆசனம் போட்டு உட்காரச் செய்கிறோம். "உச்ச ஸ்தானேஷ பூஜ்யந்தே" என்று வடமொழியில் சொல்வார்கள்.

எல்லோரையும்விட உயர்ந்தவன் முருகன். அவன் படைத்த இந்த நில உலகத்தில் எல்லாப் பொருள்களையும்விட உயர்ந்தது மலை. அந்த உயர்ந்த இடத்தில் முருகக் கடவுளை வைத்துப் போற்றினார்கள். அழகு கெழுமிய முருகனை உயர்ந்த மலைகளுக்கு எல்லாம் உரியவனாகச் செய்தார்கள்.

"விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"

என்று திருமுருகாற்றுப்படையில் வருகிறது. 'வானை முட்டும் உயர்ந்த மலைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரியவனே' என்பது பொருள். ஆகவே, நக்கீரர் இரண்டிடங்களில் முருகனைக் கிழவன் என்று சொல்கிறார். இரண்டிடங்களிலும் உரியவன் என்ற பொருளே சொல்ல வேண்டும்.

ஆனால் இன்றைக்கு, கல்யாணமான ஒரு பெண்ணிடம் போய், "உன் கிழவன் வந்துவிட்டானா?" என்று கேட்டால், "கிழவன் என்று யாரைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்பாள். "உனக்கு உரியவனாகிய உன் கணவனைத்தான் சொல்கிறேன்" என்றால் அவளுக்குக் கோபம் வந்துவிடும். "என்ன? என் கணவரைக் கிழவன் என்கிறீர்களே! நான் இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்படவில்லை. என்னைவிட அவருக்கு இரண்டு வயசு தான் அதிகம். எனக்குப் பதினெட்டுதான் ஆகிறது. அவரைக் கிழவன் என்று சொல்லாதீர்கள்" என்று கோபிப்பாள். 'கிழவன்' என்ற சொல்லுக்கு 'வயசானவன்' என்ற பொருள் பிற்காலத்தில் வந்துவிட்டது. அதுதான் அவள் கோபிப்பதற்குக் காரணம். அந்தப் பொருள் அருணகிரிநாதர் காலத்திலேயே வந்துவிட்டது.

சமத்காரம்

க்கீரர், என்றும் இளையவனாக உள்ள முருகனை,

"விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ"

என்று பாடியிக்கிறாரே என்று வேடிக்கையாக ஓர் எண்ணம் அருண்கிரியர்ருக்குத் தோன்றியது. 'கிழவன் என்று மற்றவர்களைச்

163