பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

குடியிருக்கும் வீடு

நாம் பல ஆண்டுகள் ஒரு வீட்டில் மாதம் மாதம் வாடகை கொடுத்துக் கொண்டு வாழ்ந்தால் அந்த வீட்டை நம்முடையது என்று சொல்கிறோம்; "என்னுடைய வீட்டுக்கு வாருங்கள்" என்று அழைக்கிறோம். அது வழக்கமாகப் போய்விட்டது. அதைப் போல இந்த உடம்பில் நாம் குடியிருப்பதனால் இதை நம்முடையது என்று சொல்லலாம். அந்த மட்டும் உண்மை. ஆனால் குடியிருக்கும் போதாவது அது நமக்கு முழுச் சொந்தமாக இருக்கிறதா? நம்முடைய விருப்பப்படி அதில் வளைய வரலாமா? இதைச் சற்றே சிந்தித்துப் பார்க்கலாம்.

ஒரு வீட்டில் நாம் குடியிருக்கிறோம். அந்த வீட்டின் சொந்தக்காரனும் அந்த வீட்டிலேயே மற்றொரு பகுதியில் வசித்தால் அதைவிடத் தொல்லை வேறு வேண்டியதில்லை. பெரும்பாலும் அங்கே நமக்குச் சுதந்தரம் இராது. அழகான முருகன் படத்தை அன்றைக்குத்தான் நாம் வாங்கி வந்திருப்போம். அதை மாட்டலாம் என்று சுவரில் ஆணி அடிக்கப் போனால், வீட்டின் சொந்தக்காரன் சண்டைக்கு வந்துவிடுவான்; "ஆணி அடித்து வீணாக்கவா நான் சுவர் எழுப்பினேன்?" என்று கேட்க வந்துவிடுவான்.

ஐவர் செயல்

ஒரு ஜமீன்தார்: அவர் இறக்கும்போது அவருக்கு ஒரு வீடுதான் சொந்தமாக இருந்தது. வீட்டில் ஒருவர் குடியிருந்தார். அந்த ஜமீன்தாருக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களும் அந்த வீட்டிலேயே வசிக்க வந்துவிட்டார்கள். சின்னஞ்சிறு பிள்ளைகள், செல்லப் பிள்ளைகளாக வாழ்ந்தவர்கள். ஆதலால் அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. அந்த வீட்டில் குடியிருந்தவர் ரேடியோவில் திருவாசகம் பாடுவதை அறிந்து அதைக் கேட்கலாம் என்று உட்காருகிறார். பக்திப் பாடலின் வரிசையில் ஒருவர் அழகாகத் திருவாசகத்தைப் பாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சமயம் பார்த்து, ஜமீன்தாரின் பிள்ளைகளில் ஒருவன் ஒரு தகர டப்பாவை வைத்துக் கொண்டு மிருதங்கம் வாசிக்கிறான். அவனுக்கு மிருதங்கம் கிடைக்கவில்லை. ஆகவே,

432