பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிங்கிணி ஓசை

தீட்டிச் கொண்டு காத்திருந்தார்கள். சில காலம் ஒன்றும் காணவில்லை. "சரி, வெறும் அழுகையோடு போயிற்று; நாம் பயந்தது வீண்" என்று எண்ணித் தங்கள் காரியத்தில் ஈடுபட்டார்கள். அப்போது திடீரென்று முருகனுடைய திருவரைக் கிங்கிணி யோசை கேட்டது.

பசியுடையவனுக்கு சர்க்கரைப் பொங்கலைக் கண்டால் நாவில் நீர் ஊறுகிறது. வயிற்றுவலிக்காரனுக்கு அருவருப்பாக இருக்கிறது. முருகக் குழந்தையின் சலங்கையொலி நல்லவர்களுக்கு இனிதாகவும் பொல்லாதவர்களுக்குக் கடுமையாகவும் கேட்கிறது. இயற்கையில் அது இனிய ஒலிதான். ஆனால் பிறர் தொல்லையுறுவதனால் இன்பம் அடையும் அசுரர்களுக்கு அந்த ஓசை இனியதாக இல்லை. ஒசை மேலே தவறா? அதனால் உண்டாகும் நினைவுக் கோவைதான் அவர்களுக்கு அவ்வொலியினிடம் வெறுப்பை உண்டாக்குகிறது. தம்மை அழிக்கப் போகிறவன் வளர்கிறான், இனிமேல் நம்மிடம் வந்து நம் இன்ப வாழ்வைக் குலைப்பான் என்ற எண்ணம் அந்த ஒலியால் தோன்றுகிறது. அப்போது அதன் இனிமையை உணர இயலுமா?

குழந்தையானாலும் தெய்விகக் குழந்தை. அதன் செயல் ஒவ்வொன்றிலும் தெய்வத்திறல் இருக்கும். முருகக் குழந்தையின் திருவரைக் கிங்கிணியோசை அசுரர்களின் காதை எட்டுகிறது. அவ்வளவு வலிமை உடையதாக இருக்கிறது. அதைக் கேட்டு அசுரர்கள் திடுக்கிடுகிறார்கள்; நம் வாழ்வுக்கு இறுதி வரும்போல இருக்கிறதே என்று அஞ்சுகிறார்கள்.

திருவரைக் கிங்கிணி ஓசை படத்திடுக்
கிட்டு அரக்கர்
வெருவர.

திக்குச் செவிடுபடல்

கிங்கிணி ஒசையினால் உண்டான விளைவு அதனோடு நிற்கவில்லை. அவ்வொலி திக்கு முழுவதும் சென்று பரவுகிறது. முன்பெல்லாம் திக்குப் பாலகர்கள் திக்குகளைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சுரராஜ்யம் நடந்து கொண்டிருந்தது. இப்போது அசுரராஜ்யம் அல்லவா நடக்கிறது? சூரபன்மனுடைய

347