பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கேட்க வேண்டுமென்றால் இணைப்பு வேண்டும். நாமும் தட்டித் தான் ஆண்டவனைக் கூப்பிடுகிறோம் என்று சொன்னால், அது அவன் காதில் விழ வேண்டுமே. நம்முடைய தட்டுக்கு அவனோடு இணைப்பு தர வேண்டும். "நானும் ஐந்தரைக் கட்டையில் பாடி, ஜாலராத் தட்டி இறைவனைக் கூப்பிடு கிறேனே; அவன் வரக் காணோமே" என்று சொன்னால் பயன் இல்லை. மெள்ளக் கூப்பிட்டாலும் போதும்; இணைப்பை அமைத்துக் கொண்டு கூப்பிட வேண்டும். உண்மையாக உள்ளம் உருகி, இருதயத்தோடு இணைந்து கூப்பிட்டால் அவன் ஏன் வர மாட்டான்? நாம் தட்டுவது நம் நரம்பிலே போய் அடிக்க வில்லை; முருகா என்று போடும் சத்தம் பலமாக இருக்கிறதே தவிர, இருதயம் அதனோடு இணையவில்லையே! செடியில் பூத்திருக்கிற ரோஜா மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொண்டால் செடியில் இருக்கும்போது இருந்த அழகு அப்போது இருக்குமா? இறைவனுடைய நாமத்தை நாக்காலே சொல்லிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? இது செடியில் இயற்கையாக இருக்கும் மலரைப் பறித்துச் சட்டையில் செருகிக் கொள்வது போன்றதுதான். நாம் சொல்வது நம் இருதயத்துக்குக் கூடக் கேட்பதில்லையே! அப்படி இருக்கும்போது ஆண்டவனுக்குக் கேட்கவில்லையே என்று சொல்ல நாம் யார்? இருதயத்தோடு இணைந்து, ஒன்றாகி, உள்ளுருகி அழைத்தால் அவன் காதில் விழாமலா போகும்? அப்படிச் சொல்கிற பக்திநிலை உண்டாகிவிட்டால், பக்குவம் வந்துவிட்டால், நமக்கு அருள் செய்வதற்கு அவன் ஓடி வருவான். அதில் சிறிதும் ஐயம் இல்லை.

நாடக மேடையில் ஏறி ஒருவன், "அம்மா" என்று கூப்பிட்டால் அவனுடைய சொந்த அம்மாவா, "ஏன் கூப்பிட்டாய்?" என்று ஓடி வருவாள்? அம்மாவாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறவன்தான் வருவான். நாடகத்தில் நடிப்பதைப் போல நாம் முருகா என்று கூப்பிட்டால் முருகன் ஒடி வருவானா

"நாடகத்தால் உன் அடியார் போல்நடித்து நான்நடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விழைகின்றேன்"

என்று மாண்க்கவாசகர் சொல்கிறார்.

202