பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

1

உடம்பாகிய வீடு

லகத்தில் சொத்துப் படைத்தவர்கள் எல்லாம் நிலமும் வீடும் படைத்திருக்கிறார்கள். சிலருக்கு நிலம் இல்லாவிட்டாலும் வீடு இருக்கிறது. நமக்கு என்ன வீடு இருக்கிறது? ஒன்றும் இல்லை என்று நம்மில் சிலர் நினைக்கிறோம். ஆனால் நம் எல்லோருக்கும் வீடு இருக்கின்றது. உயிர்களாகிய ஆன்மாக்கள் தங்கி வாழ்கின்ற வீடு ஒன்று உண்டு. அதற்கு உடம்பு என்று பெயர். தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் 'தேகி' என்பார்கள். தேகமாகிய வீட்டுக்கு விலாசம் உண்டு; பெயர் உண்டு. விலாசம் உள்ள அந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. மனிதன் என்று உயிர் உள்ளவனைத்தான் சொல்கிறோம். முத்துசாமி செட்டியார், முத்துசாமி ஐயர் என்றெல்லாம் விலாசம் போட்டுச் சொல்வது ஆன்மாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு அல்ல; உடம்பை அடையாளம் காணத்தான். உயிரோடு வாழ்கிற உடம்புக்குத்தான் அத்தகைய விலாசம் இட்டுச் சொல்கிறோம். உடம்பில் வாழ்கிற உயிர் புறப்பட்டுப் போய் விட்டால் அந்த உடம்புக்கு விலாசம் இல்லை. எல்லா உடம்புக்கும் அப்பொழுது ஒரே பெயர்தான் அமைகிறது. மக்கள் வசிக்காத இடிந்த வீடுகளை விலாசம் இல்லாமல் 'குட்டிச்சுவர்' ன்ன்று அழைப்பதைப் போல, உடம்பாகிய வீட்டிலிருந்து உயிர் போய்விட்டால் இதனைப் பிணம் என்று அழைக்கிறோம்.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே"

என்று சொல்கிறார் திருமூலர்.

யாருக்குச் சொந்தம்?

பிணமாக இல்லாமல், உடம்பாக வளர்ச்சியுடன் இருக்கிறது இந்த விடு. மனிதனென்று சிறப்புப் பெறுகிறது. இந்த வீட்டில் உயிர் குடியிருக்கிறது. இந்த உடம்பாகிய வீடு உயிர்க்குச்

130