பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பாட்டைப் பாடினால், அது மிக இனிமையாக இருக்கிறது. அதைச் சங்கீதம் என்கிறோம். எல்லாம் ஒரு சுருதியோடு சேர்ந்து அமைந்தால், "மேளம் கட்டிவிட்டது” என்று சொல்வது வழக்கம். 'மேளம்' என்பது கூட்டுறவு என்று பொருள்படும் சொல். வாய்ப் பாட்டு வேறு, மிருதங்கம் வேறு, குழல் வேறு, பிடில் வேறு என்றாலும் எல்லாம் ஒரு நெறியிலே இயங்கும்போது இன்பம் உண்டாகிறது. பல வகையான இசைக்கருவிகளிடையே ஓர் ஒற்றுமை இருக்கிறது. இதை வேற்றுமையில் ஒற்றுமை (Unity in diversity) என்று சொல்வார்கள்.

பூசையிலும் இந்த ஒற்றுமை வேண்டும். ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறாகக் சிதறுண்டு இருந்தாலும் அவற்றை நெறிப் படுத்தி இறைவன்பால் அவற்றை ஒருமுகமாகச் செலுத்துவது பூசை. பூசை செய்ய உட்கார்ந்தும் இந்த ஐந்து இந்திரியங்களை வெவ்வேறு வழியில் செல்ல விட்டு, மனம் எதையோ நினைத்துக் கொண்டிருந்தால் அது பூசையாகாது. வாய்ப் பாட்டுக்காரர் ஒரு பாட்டுப் பாட, குழல் ஊதுகிறவர் வேறொரு பாட்டை வாசிக்க, மிருதங்கக்காரன் ஏதோ ஒரு தாளத்துக்கு வாசித்தால் அது கச்சேரி ஆகாது. ஒரே கூச்சலாக இருக்கும். அது போலத்தான் ஐந்து இந்திரியங்களும் வெவ்வேறு காரியங்களைச் செய்ய, நாம் பூசை செய்தால் அது பூசையாக இராது. "ஆண்டவனே. நான் உனக்குப் பூசை செய்ய வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். ஆனால் இந்த உடம்பாகிய வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகிற பொறிகளாகிய ஐந்து பேர்களும் நான் ஆசைப்படுவது போலப் பூசை செய்யவிடமாட்டோம் என்கிறார்களே என்று அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் சொல்கிறார்.

ஒரஓட் டார்ஒன்றை உன்னஓட் டார்மலர்
இட்டுனதாள்
சேரஒட் டார்ஐவர் செய்வதென் யான்?

இது கந்தர் அலங்காரத்தின் நான்காவது பாட்டின் முதற் பகுதி. இதில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. தாம் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கிற ஐந்து பொறிகளின் செயல்களும், அதனால் தாம் என்ன செய்ய முடியும் என்று ஏங்குகிற தன்மையும் ஆகிய இரண்டு செய்திகளை அருண

148