பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

விரிவாகப் பாடுவதற்கான பொருளைத் தொகுத்துக் கொண்டவர். அவருக்கு முன்பிருந்த புலவர்கள் முருகனுடைய வீரத்தை வருணிக்கும்போது, களவேள்வி பற்றிச் சொல்லியிருப்பவற்றை யெல்லாம் சேகரித்துக் கொண்டு நாம் படித்துச் சுவைக்கும் வகையில் அவற்றைச் சொல்கிறார்.

திருப்புகழில் பேய்களின் விளையாட்டை வெவ்வேறு வகையில் பாடியிருக்கிறார். ஒர் உதாரணம்:

"குடிப்பன முகப்பன நெடிப்பன நடப்பன
கொழுத்தகு ருதிக்கடலிடையூடே
குதிப்பன மதிப்பன குளிப்பன களிப்பன
குவட்டினை இடிப்பன சிலபாடல்
படிப்பன திருப்புகழ் எடுப்பன முடிப்பன
பயிற்றில கைக்குலம் விளையாடப்
பகைத்தெழும் அரக்கரை இமைப்பொழு திணிற்பொடி
படப்பொரு துழக்கிய பெருமாளே."[1]

என்று கந்தர் அலங்காரத்திலும் வேறு ஒரு பாட்டில்,

"................... முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டுடு டுடுடுடு
டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி ஆடவெஞ்
சூர்க்கொன்ற ராவுத்தனே"

என்று பாடுகிறார்.

திருவகுப்பு

வற்றையன்றித் திருவகுப்பில் மிக விரிவாக அலகைகளின் கூத்தைப் பாடியிருக்கிறார். இருபத்தைந்து பாடல்கள் அமைந்த அந்நூலில் மூன்று பேய்க்கூத்தை வருணிப்பவை. பொருகளத்து அலகை வகுப்பு, செருக்களத்து அலகை வகுப்பு, போர்க்களத்து


229

  1. நெடிப்பன - உயர்ந்து நிற்பன. மதிப்பன-கடைவன. குவடு-மலை. அலகைக் குலம்-பேய்க் கூட்டம். உழக்கிய-கலக்கிய. குடிப்பனவாகியும் முகப்பனவாகியும்... முடிப்பனவாகியும் அலகைக்குலம் பயிற்றி விளையாட அரக்கரை இமைப்பொழுதினில் உழக்கிய பெருமாளே என்று பொருள் கொள்ள வேண்டும்.