பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேய் விளையாட்டு

வற்றைப் பொருள்' என்று உணரும் பொறிகளை அசட்டர்கள் என்று கம்பர் சொல்கிறார்.

உண்மை அறிவு தலைப்பட்டபோது சத்தான செயல்களைச் செய்வோம். அறியாமையாகிய மருள் தோன்றினால் அசத்தான செயல்கள விளையும். மருள் நீங்கி அருள் உண்டானால் இந்த அசட்டுச் செயல்கள் இல்லாமற் போகும். அவற்றால் ஏற்படும் தவிப்பும் இல்லையாகும்.

உலகப் பொருள்களை இந்திரியங்களின் வாயிலாக நுகர்ந்து, அவற்றின் உண்மையை உணராமல் வாழ்க்கையை நடத்துகிறவர்கள் அசட்டுத்தனம் உடையவர்கள். அந்த நிலை மாற வேண்டுமானால் இந்திரியங்களின் போக்கைத் திருப்பிவிட வேண்டும்.

அசட்டுக் காரியங்களைச் செய்வதனால் நாம் இன்பத்தை அடைவதில்லை; தவிக்கிறோம் துன்புறுகிறோம். ஜெயிலுக்குள் இருக்கும் கைதி, "நானாக இங்கே வரவில்லை. என்னைப் போலீஸ்காரர்கள் இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்து விட்டார்கள்" என்று சொல்கிறான். அவன் தானே சிறைக்குள் வரவில்லை என்பது உண்மை. ஆனால் அங்கே வருவதற்கு ஏதுவான அசட்டுக் காரியத்தைச் செய்தவன் அவன்தான். சிறைக்குள் வருவதற்கு மூலகாரணமான குற்றத்தை அவன் செய்யும் போதே சிறையின் வாயிற்கதவை அவன் தனக்காகத் திறந்து கொண்டுவிட்டான். அப்போது அவனுக்கு அது தெரிவதில்லை. அதன் பயனாகச் சிறைவாசம் அநுபவிக்கும்போது தவிக்கிறான். தன்னைக் கொண்டு வந்து போலீஸ்காரர்கள் உள்ளே அடைத்து விட்டார்கள் என்று குறை கூறுகிறான். சிறைக்குள் வருவதற்குக் காரணமான குற்றத்தைச் செய்யாமல் தவிர்த்திருந்தால் அவனை யார் உள்ளே கொண்டு வந்து அடைக்க முடியும்?

இந்த உடம்பாகிய சிறைக்குள் வந்து அடைபட்டுத் தண்டனை அநுபவிப்பதற்குக் காரணமான அசட்டுக் காரியங்களைச் செய்தவர்கள் நாம். இங்கு வந்தும் அவற்றை நாம் விடுவதில்லை. கைதியைப்போல, இறைவன் நம்மை இந்த உடம்புக்குள் அடைத்து விட்டு அருள் செய்யாமல் இருக்கிறான் என்று குறை கூறவும் துணிகிறோம்.

நாம் படும் தவிப்பைத் தாபம் என்று சொல்வார்கள். அது உயிர்களால் வருபவை, சடப் பொருள்களால் வருபவை, தெய்

219