பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககையும் மலரும் - 37

கடைக்கோ போனல், போனுேம், எதையோ ஒன்றை எடுத்தோம், வாங்கி வந்தோம் என்னும்படி வியாபாரம் செய்கிருர்களா? இல்லே. பத்து ரூபாயில் ஒரு புடைவை வாங்கவேண்டி யிருக்கும். அந்தப் புடைவையை மிக அரு கில் உள்ள கடையிலே வாங்கிவிடலாம். அப்படிச் செய்ய அந்த ஆயிழைகளுக்கு விருப்பம் இருப்பதில்லை. கால் கடுக்கப் பல கட்ைகளில் ஏறி இறங்கி அங்குள்ள ஒவ்வோர் அலமாரியையும் காலிபண்ணச் செய்து ஒருவிதமாக ஊரில் உள்ள புடைவைகளே யெல்லாம் கண்காணித்த பிறகே ஒரு புடைவையை எடுத்துக்கொண்டு வருவார்கள். ககைக் கடை, பாத்திரக் கடை ஏதானுலும் தேர்ந்தெடுக்கும் வழ்க்கத்தை அவர்கள் விடுவதே இல்லை. " ; ;

எந்தக் காலத்திலும் இந்த வழக்கம் பெண்ணுலகத் துக்கு உரியது போலும்! அதனுல்தான் பழங்கால முதல் பெண்களேத் தெரியிழை என்றும், ஆயிழை என்றும் தமிழ்ப் புலவர்கள் சொல்லி வருகிருர்கள். நகைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் மங்கையருக்கு அளவற்ற ஆசை. தலைமுதல் பாதம் வரையில் தமிழ் மகளிர் அணிந்த நகைகளுக்குக் கணக்கே இல்லை. இப்படி எல்லா கைகள்ே யும் அணிந்துகொண்ட மங்கையைப் பார்த்துப் புலவர்கள், "முற்றிழை” என்று வருணித்தார்கள். உடம்பு முழுதும் ஆபரணங்கள் நிரம்பி யிருப்பதல்ை, இவளுக்கு இன்ன நகை இல்லையென்ற குறையின்றி எல்லாம் பரிபூரணமாக அமைந்திருப்பதல்ை அவளே முற்றிழை என்று சொன் ஞர்கள். ' அணியிலாக் கவிதை, பணியிலா வனிதை' என்று ஒரு பழம்ொழி தமிழ் காட்டில் உலவுகிறது. பெண்டிருக்கு ஆபரணம் அவசியம் என்ற கருத்தை அது புலப்படுத்துகிற தல்லவா? - . .

பழங்காலத்தில் ஒரு காதலன் தன் காதலியை மணப் பதற்காகப் பரிசம் போடுவான். அந்தப் பரிசத்தைத் தன்