பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூசாரி வரம்

5

ஏ மருதமலே வீசப்பா ஆஆஆஆஆஆ..!
மணமுடிக்க வேண்டுமப்பா ஆஆ.ஆஆஆஆ..!

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

உனக்கு ஆடுகோழி தாரேன்
ஒசந்த சாம்பிராணி தாரேன்

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

பாடுபட்டுப் பொங்கித் தின்னப்
பாப்பாத்தி கல்யாணம்

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

அது நல்லா முடிச்சு வச்சால்
நல்லவேட்டி ரெண்டு தாரேன்

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

நீ சத்துருவை மூக்காலே
வாயாலே ரத்தங் கொட்ட

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

ஐயா-ஊரைவிட்டுத் தான் ஓட்டி
உதவி செய்ய வாராயோ?

(பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்-பிம்பிம்பிம்)

சத்துருவை ஊரை விட்டு ஓட்டவும் பயமுறுத்தவும் மருதமலை வீரப்பனுக்கு இரண்டு வேட்டி வாங்கித் தருவதாகச் சொல்கிறான் பூசாரி. அந்த இரண்டு வேட்டியும் மருதமலை வீரப்பனா கட்டிக் கொள்ளப் போகிறான்? பூசாரி வீரப்பனல்லவா கட்டிக்கொண்டு குதூகலிக்கப் போகிறான்?

மருதமலை வீரப்பன் இப்படி அழைக்கும்போது அந்தச் சாமி மலையிலிருந்து இறங்கி வந்து பூசாரிக்குள்