பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கஞ்சியிலும் இன்பம்

27

குடும்ப நிர்வாகத்தில் அவள் தன்னையும், குழந்தைகளையும், உறவினர்களையும் பாதுகாத்துக் கொள்வது ஒரு. பங்காகவும், தன் நாயகனைப் பாதுகாப்பது ஒரு பங்காகவும் இருக்க வேண்டும். அவனுடைய உடல் நலத்தைக் கவனித்து அவனது வாய்க்கும் வயிற்றுக்கும் ஏற்றபடி உணவளித்துப் போற்றுவதை அவள் தன் முதற் கடமையாகக் கொள்ள வேண்டும். -

மிகச் சிறந்த இன்ப வாழ்வு என்பது, குறைவற்ற செல்வத்தை மனைவி மக்களோடு அநுபவிப்பது மாத்திரம் அல்ல. மனைவி இனிய உணவைக் காதலன் பசியையும் ருசியையும் அறிந்து உதவ, உண்டு வாழ்வது இன்ப வாழ்வு.

அதோ ஒரு சிறந்த பணக்காரர் இருக்கிறார் ; கோடீசுவரர் வீட்டில் பண்டங்களெல்லாம் நிரம்பியிருக்கின்றன. சமையற்காரன் சமைத்துப் போடுகிறான். என்ன பிரயோசனம்? அவர் உண்ணும்பொழுது உடன் இருந்து இனிய மொழிகளைப் பேசி உண்ணச் செய்யும் மனைவி ஒருத்தி இல்லையே! -

அவள் இருந்தால் எல்லாம் இருப்பதுபோலத் தோன்றும் "வீட்டுக்காரி நல்ல யோக்கியதை உடையவளாக இருந்தால், அந்த வீட்டில் இல்லாத இன்பம் வேறு ஏது? அவள் சரியாக இல்லாவிட்டால் என்னதான் இருந்தாலும் என்ன ஐயா பிரயோசனம்?" என்று வள்ளுவர் கேட்கிறார்.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மானாக் கடை?

ஆகவே காதலனுக்கு உணவூட்டும் காரியத்தில் மனைத் தலைவிக்குக் கவனம். இருக்க வேண்டும் "இதோ பாருங்கள் என்ன திவ்யமாக இருக்கிறது! அமிர்தம்