பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

அன்றாடம் பேசி, பழகுவதுபோல் அமைத்துச் சென்றிருகின்றனர்.

ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பேசுகிறபோது, அது உள்ளத்திலே பதிந்துவிடுகிறது. அவ்வாறு பதிந்துபோய், முதிர்ந்துபோன சொற்கள், உள்ளத்திலே உணர்வுகளை மீட்டிக் கொண்டு, மேன்மைப்படுத்த முனைகின்றன.

அவ்வாறு உணர்வுகளை மீட்டுகின்ற உத்வேகமான சொற்கள் ஒன்பதை இங்கே தேர்ந்து எடுத்துக் கொண்டு, அவைகள் காதிலே சொல்லுகின்ற விஷயங்கள் என்ன? கருத்துக்குள்ளே பொழிகிற இரகசியங்கள் என்ன? அவற்றை அறிகிறபோது அடைகிற அதிசயத்தன்மைதான் என்ன? அத்தியாவசியம் என்கிறபோது, அதன் அந்தரங்க நளினம்தான் என்ன? என்பனவற்றை அறிகிறபோது, எல்லோருக்கும் தெரிந்த சொல்லானது, நல் இரகசியமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘வாழ்க்கை’ என்ற சொல் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைக் காட்டுகிறது. ’மனிதன்' என்ற சொல் எப்படிப் பெருமையோடு வாழ வேண்டும் என்பதை வற்புறுத்துகிறது. சாதாரண சுவாசம் என்று நாம் சலனப்படாமல் கூட இருக்கிறோமே. அந்த சுவாசமானது, எவ்வாறு அம்சமாக மாறுகிறது என்பதையெல்லாம் அறிகிறபோது வாய்விட்டுப் போற்றுகிறோம்.

சாப்பிடுவதில் உள்ள சமத்கார முறையும், உறங்கும்போது எப்படிப்பட்ட உடல்நிலை, மன நிலை இருக்கிறது என்பதையும்; எப்படியிருந்தால் உடல் எப்பொழுதும் அழகாக இருக்குமென்றும், உடை உடுத்துவதில் உள்ள ஒழுக்கம் என்ன? எப்படி