பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

கஞ்சியிலும் இன்பம்

பிரமதேவன் பத்தினி. திருமாலுக்குப் பிரமதேவன் பிள்ளை முறையுடையவன். ஆகையால் திருமகளுக்கு நாமகள் மருமகள் ஆகவேண்டும். மாமியாருக்கும் மருமகளுக்கும் இந்த நாட்டில் ஒற்றுமை இருக்கலாமா ? சம்பிரதாய விரோதம் அல்லவா? ஆகையால் எங்கெங்கே மாமியாராகிய திருமகள் உறைகிறாளோ அங்கெல்லாம் மருமகளாகிய நாமகள் தலைகாட்ட நாணுவாளாம். நாமகள் வந்து ஆக்கிரமித்துவிட்டாள் என்று தெரிந்தால் திருமகள் மெல்ல நழுவி விடுவாளாம்.

நாவின் கிழத்தி உறைதலால் சேராளே
பூவின் கிழத்தி புலந்து

என்று புலவர் சொல்கிறார். காவின் கிழத்தி-கலைமகள். பூவின் கிழத்தி-திருமகள் புலந்து-கோபித்து

இலக்கியத்தில் இப்படி இலை மறைவு காய் மறைவாக உள்ள விஷயம் வாழ்க்கையில் வெளிப்படையாக இருக்கிறது. மாமியாருடைய கொடுமைக்கு ஆளான பேதை மருமகள் தான் மாமியார் ஆகும்போது பழைய கஷ்டங்களை மறந்து போகிறாள். அந்தப் பதவிக்கென்று தனியாக அமைந்துள்ள அதிகாரமும், பொருமையும், கலகமிடும் குணமும், புறங் கூறுவதும் எப்படியோ அவளிடம் வந்து சேர்ந்துவிடுகின்றன.

வாழ்க்கையில் உள்ள செய்திகளை உள்ளபடியே எடுத்துக் காட்டுவது நாடோடி இலக்கியம். வாழ்க்கை அநுபவத்தின் சாரமென்று சொல்லத் தகும் பழமொழிகளிலும், நாடோடிப் பாடல்களிலும், நாடோடிக் கதைகளிலும் மாமியாரின் திருவிளையாடல்களை ஆயிரம் வகைகளில் கேட்கிறோம் மாமியார் மருமகள் யுத்தத்தைப்பற்றி வழங்கும் செய்திகளை யெல்லாம் ஒன்றாகத் திரட்டி வகுத்து அமைத்தால் அது பெரிய பாரதக் கதையைப்போல ஆகிவிடும்!