பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

முன்னுரை

டம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள் என்று இந்த நூலுக்குப் பெயர் சூட்டியிருக்கிறேன்.

உடம்பு என்பது, உலகத் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப, மாற்றம் பெறுகிற தன்மை கொண்டது. மாறுபடுகின்ற உடலமைப்பின் கூறுபாடுகளை, சற்று கூர்ந்து அறிகிறபோது, அங்கே விளைகிற வேறுபாடுகளின் விபரீதமும் நமக்கு நன்றாகவே புரிகிறது.

உடலானது உலகச் சூழ்நிலைக்கேற்ப மாறிக் கொண்டு இருக்கிறது. அதனை நாம் அனுசரித்துவிட்டால், உடல் நலமாக இருக்கும். உறுப்புக்கள் வளமாக செழிக்கும்.

உலக அமைப்புடன் உடல் ஒத்துக் கொள்ளாமல் போகிறபோது, உடலுக்குள் நோய்களும், வலியின் வாய்களும் பேயாய் தின்ன ஆரம்பிக்கும்.

அப்படி எதுவும் ஆகிவிடக்கூடாது என்று அக்கறை கொண்ட நமது முன்னோர்கள் சமையற்கட்டிலே பயன்படும் உணவுப் பண்டங்களில் எல்லாம் மருந்தாக பல பொருட்களை சேகரித்து, விருந்து படைத்து, மகிழ வைத்துச் சென்றனர்.

அதுபோலவே, மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறபோது, அர்த்தம் பொதிந்த மருத்துவச் சொற்களை,