பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

29


காசநோயாளி, என்பார்கள். உடலின் அமைப்பிற்கு ஏற்பக் குள்ளன், குண்டன், ஒட்டடைக்குச்சி, சோளக்கொல்லை பொம்மை என்பார்கள்.

அதைப்போல அவன் புத்திசாலியாக இருந்தால் அறிஞன் என்னும், அறிவு இழந்தவனை மந்தன் என்றும் பலவாறு கூறுவார்கள்.

இங்கே நாம் அந்த நான்கு பேர்கள் யார் யார் என்று, அறிவு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும், ஒழுக்க பூர்வமாகவும் பிரித்துப் பார்க்கிறோம்.

1. மரன்
2. பாமரன்
3. அறன்

4. இந்திரன்

நான் விளக்க வந்த இந்த நான்கு பேர்களைப் பற்றியும் ஒரு சிறிது விளக்கமாகக் காண்போம்.

1. மரன்

அவ்வை ஓரிடத்தில் பாடுகிறார். “சபை நடவே நீட்டோலை வாசியா நின்றான், குறிப்பறிய மாட்டாதவன் நன் மரம்” என்று. தானே குறிப்பாகச் சொல்லத் தெரியவில்லை. ஒருவாறு குறிப்புக் கொடுத்தாலும் சொல்ல முடியவில்லை. அதாவது தனக்குச் சொந்தமாகவும் தெரியவில்லை. சொல்லியும் தெரியவில்லை. அதாவது சொந்த புத்தியும் இல்லை. சொல் புத்தியும் இல்லை. இப்படிப்பட்டவர்களைத்தான் அவ்வையார் மரம் போன்றவர்கள் என்கிறார்.