பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்



அவன் தான் புண்ணியன். இந்த உலகத்தின் பெருமை காக்கின்ற கண்ணியன். இனியாவது இந்த இரகசியக் சொல் காட்டிய வழியில் நாம் இதமாக நடந்து சுகமாக வாழ்வோம்.

சராசரியாக வாழ்கிற ஒருவனை ‘மனிதன்' என்றும் அந்தத் தரத்திலிருந்து, மனதத் தன்மையிலிருந்து தாழ்ந்து போனவனைக் ‘கினிதன்' என்றும், சராசரி மனிதனை விடச் சகலத்திலும் மேம்பட்ட ஒருவனைப் ’புனிதன்’ என்றும் சான்றோர்கள் அழைக்கிறார்கள். மனிதனைப் பிரிக்கும் வகையில் இந்த மூன்று நிலையோடு யாரும் நின்றுவிடுவதில்லை. ஏதோ பொதுவாகவே அந்த ‘நாலு பேர்’ என்பார்கள்.

‘அந்த நாலு பேர் அறிய’ என்று சாட்சியும் அளிப்பார்கள். ’அந்த நாலு பேருக்கு நன்றி’ என்று கூறி நயம் பாராட்டுவார்கள். யாரைக் கேட்டாலும், அந்த நாலு பேர் யார் என்பதைச் சொல்ல மாட்டார்கள். அந்த நாலு வகையான மனிதர்களை இங்கே நாம் இனம் பிரித்துப் பார்க்கலாம்.

மனிதனுக்கு என்று விசேஷமான சிறப்பு ஒன்று உண்டு. அவனுக்கு அவனது பெற்றோர்கள் வைக்கும் பெயர் ஒன்றாக இருந்தாலும் அவன் வாழ்கிற இடத்திற்கேற்ப, செய்கிற தொழிலுக்கேற்ப, அனுபவிக்கிற முறைகளுக்கு ஏற்ப, வகிக்கிற பதவிகளுக்கு ஏற்பப் பெயர் மாறிக் கொண்டேவரும்.

உதாரணமாக, செய்கிற வேலையைப் பொருத்து தச்சன், கொத்தன், ஆசாரி என்பார்கள். அவன் அனுபவிக்கிற நோய்களுக்கேற்ப தொழு நோயாளி