பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

୫୦ கஞ்சியிலும் இன்பம்

போல வருவனவற்றை விடுகதை என்ற பெயரால் குறிப் பதுதான் பொருத்தமாக இருக்கும்.

அத்தகைய கதைகளில் சம்பாஷணைகள் இருக்கும். அவை சங்கேதமாக, குறிப்புப் பொருளுடன், கேட்பவர் சிக்தனையைத் தூண்டுவனவாக அமைந்திருக்கும். மிகவும் சிக்கலான செய்திகளையுடைய இந்தச் சங்கேத சம்பாஷணை கள், யோசிக்க யோசிக்க உற்சாகத்தையும், விடை கண்டு பிடித்தவுடன் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். சில உதார னங்களைப் பார்க்கலாம். -

l

ஒருவன் தன் மனேவியை விட்டு வெளியூருக்குப்

போயிருந்தான். அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் அவனைப் பார்க்க வந்து வாசலில் தன் செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்ருன். அவன் சென்ற அடுத்த கணத்தில் ஊருக்குப் போனவன் திரும்பி வந்து விட்டான். வந்து தன் வீட்டுக்குள் நுழையும்போது வாசலில் யாரோ செருப்பு விட்டிருப்பதைப் பார்த்தான். இயல்பாகவே தன் மனைவியினிடம் வெறுப்படைந்திருந்த அவனுக்கு இப்போது அவளிடம் சந்தேகம் வேறு உண்டாகி விட்டது. உடனே எங்கோ போய்விட்டு, உள்ளே சென்ற கண்பன் போன் பிறகு வீட்டுக்குப் போனன். ஏதோ காரணம் சொல்லித் தன் மனைவியைப் பிறந்தகத்துக்கு அனுப்பிவிட்டான். .

உண்மை அன்பும் ஒழுக்கமும் அமைந்த அந்தப் பெண்மணி மிகவும் துயரத்துக்கு ஆளாகிருள். தன் பிறந் தகத்துக்குச் சென்றது முதல் உணவே உண்ணுமல் சோர்ந்து கிடக்கிருள். அவளுடைய சகோதரன் அவள் நிலையைக் கண்டு மிகவும் வருந்தி, என்ன செய்யலாம் என்று யோசிக்கிருன். х * .