பக்கம்:எழுத்தாளர்கள் பத்திரிகைகள்-அன்றும் இன்றும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37


படிக்க வேண்டும். முந்திய தலைமுறைப் படைப்பாளிகள் பலரது எழுத்துக்களையும் படித்தாக வேண்டும். பழம் தமிழ் இலக்கிய அறிவும் அவசியம் தேவை , அவற்றையும் சிறிது சிறிதாகப் படிப்பது நல்லது.

அப்போது தான் தமிழில் என்ன என்ன படைக்கப் பட்டிருக்கின்றன; புதிதாக இனி என்ன செய்யப்பட வேண்டும்; நம் பங்கிற்கு நாம் என்ன செய்யலாம் என்ற தெளிவு பிறக்கும்.

தமிழில் இதுவரை என்ன என்ன செய்யப் பட்டிருக்கின்றன - நமக்கு முந்தியவர்கள் எப்படிப்பட்ட சாதனைகள் புரிந்திருக்கிருர்கள் - என்பதைப் புசி ந் து கொள்ளாமல், தெரிந்து கொள்ள விரும்பாமலே, தமிழில் புதியன படைக்கப்படவில்லை. நம்மால் தான் புதிதாக செய்ய முடியும். நாம் தான் தமிழை உலக இலக்கியத்தின் தரத்துக்கு உயர்த்தப் போகிருேம் ' என்று பேசுவதும் எழுதுவதும் சில எழுத்தாளர்கள், கவிஞர்களின் இயல்பாக இருக்கிறது.

இந்த தற்சிறப்பு மோகமும், தன் அகங்காரமும் அவர்களுக்கும் நல்லது செய்யா, மொழிக்கும் சமூகத்துக்கும் நன்மை பயக்கமாட்டா.

படிப்பதோடு, இளைஞர்கள் அனுபவம் பெற முயல வேண்டும். மக்களோடு பழகி,புரிந்து கொள்ள முயல வேண்டும். விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, உலகை , என்பது கவிவாக்கு வாழ்க்கையை பாடநூலாகவும் மனிதர்களை பாடங்களாகவும், அனுபவத்தை ஆசான் ஆகவும், உலகத்தைப் பெரிய பல்கலைக்கழகமாகவும், தன்னை நிரந்தர மாணவன் ஆகவும் கொண்டு, தளராத தன்னம்பிக்கை யோடும் குறையாத ஆர்வத்துடனும்- குன்றாத ஊக்கத்தோடு