பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

கஞ்சியிலும் இன்பம்

காசி வாசிப் பிராம்மணரே .
       பகல் வந்த முறைக்கு தான் மைத்துனனே
மகனா ராகிய மாமனார் கூப்பிடுகிறார்

       சாப்பிட வாரும் பாட்டனாரே!

இதைக் கேட்டவுடன் காசிவாசிக்குத் தூக்கி வாரிப் போட்டது. “என்ன!” என்று திடுக்கிட்டுப் போனர். பேசாமல் உள்ளே போய்ச் சாப்பிட்டார். “இந்தப் பாட்டை யார் அப்பா சொன்னர்?” என்று கேட்டார். “பாட்டி” என்று பதில் வந்தது. “பாட்டி யார்?” என்று கேட்டார் கிழவர். "உங்களைத் தெரிந்து கொண்டவள்” என்று விடை கிடைத்தது.

"ஒரு மகாபாதகத்திலிருந்து என்னைத் தப்புவித்தீர்கள். இந்தக் கல்யாணம் வேண்டாம்" என்று சொல்லி அவர் மீண்டும் காசிக்கே போய்விட்டார். அவர் ஏழைப் பிராமணனுக்குச் சொந்தத் தகப்பனர்!