பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கேத சம்பாஷணை

நாடோடியாக வழங்கும் பாடல்கள், கதைகள், பழ மொழிகள், விடுகதைகள் எல்லாம் நாடோடி இல்க்கியத் தின் வகைகள். இளஞ் சிறுவர் சிறுமிகளுக்கு யோசிக் கும் சக்தியையும் உற்சாகத்தையும் உண்டாக்கும். விடு கதைகள் ஒவ்வொரு மொழியிலும் உள்ளன. தமிழில் பண்டைக் காலத்தில் அவற்றைப் பிசி என்று சொல்லி வந்தார்கள். தொல்காப்பியத்தில் பிசியின் இலக்கணம் சொல்லப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில் புதிர் என்றும், விடுகதை, அழிப்ப்ான் கதை, வெடி, கொடி என்றும் வழங்கும். .

விடுகதைகளில் பல வகைகள் உண்டு. ஒரே பொரு ளேக் குறிப்பாகச் சொல்வதும், சம்பந்தம் உள்ள பல பண்டங்களைக் குறிப்பிப்பதும், தொடர்பில்லாத பல பொருள்களே விடையாகக் கொண்டதும் ஆக விடுகதைகள் - அமைந்திருப்பதைக் காணலாம். தினந்தோறும் வாழ்க் கைக்குத் தேவையான பொருள்களைப் பற்றிய விடுகதை கள் பல. தொழிலாளிகள் தங்கள் தங்கள் தொழில்: சம்பந்தமாக அமைத்துச் சொல்லும் விடுகதைகள் பல. காடோடி இலக்கியத்தில் வாழ்க்கையின் பல இறப் பகுதி களின் போக்கும் சுவடு விட்டிருக்கும். இந்த இலக்கணம் விடுகதைகளுக்கும் பொருந்தும். - * ..' . . . . . . .

சில விடுகதைகள் கதையைப்போலவே . . விரிவாக இருக்கும். சின்னச் சின்ன விடுகதைகளுக்குப் புதிர் அல் லது பிதிர் என்ற பெயரே மிகவும் பொருந்தும் கதை