பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடும்ப விரிவு

49

வதும் படர்ந்து அருகில் உள்ள மரத்துக்கும் தாவும் கொடி போல நம் தேவை. படர்ந்து செல்கிறது. தேவையின் ஆரம்பம் ஆலம் விதையைப்போலச் சிறிய உருவத்திலே இருக்கும். பிறகு முடிவே இல்லாமல் ஆலமரத்தைப் போலக் கப்பும் கிளையும் வேரும் விழுதும் விட்டுக் கொண்டே போகும்.

கூலிக்கு வேலை செய்யும் ஏழைப் பெண் ஒருத்தி நெல்லுக் குத்தி அதனால் கிடைக்கும் கூலி நெல்லைப் பெற்று வயிறு வளர்த்து வந்தாள். நெல்லைக் குத்தும் இடத்தில் அரிசியாகக் கூலியைப் பெறாமல் நெல்லாகவே பெற்றாள். வீடுதோறும் நெல்லுக் குத்தும் அவளுக்கு வீட்டில் வந்தும் நெல்லுக் குத்தவேண்டியிருந்தது.

நெல்லைக் குத்த முதலில் உரல் வாங்கினாள். பிறகு கூலிநெல்லில் மீதம் பிடித்து உலக்கையும் வாங்கினாள். ஏதோ பழைய பானையில் சோறு ஆக்கி முதலில் உண்டு வந்தாள். நல்ல கூலி கிடைத்துவரவே உரலும் உலக்கையும் பழம்பானையுமாகிய சொத்தோடு நிற்க அவள் விரும்பவில்லை. "எவ்வளவு நாளைக்கு இந்தப் பழம்பானையை வைத்துக்கொண்டிருப்பது ?" என்று நினைத்தாள். ஊர் முழுவதும் பொங்கலுக்குப் புதுப்பானை வாங்கும்போது அவள் மட்டும் பழம்பானையிலே சோறு ஆக்குவானேன்? புதுப்பான வாங்கினாள். உரல் நெல்லைத் தன் அருமையான உலக்கையால் குத்தி எடுத்துப் புதுப்பானையில் சோறு ஆக்கித் தின்றாள். அன்று அவளுக்கு எத்தனே இன்பம் உண்டாயிற்று, தெரியுமா?

புதுப்பானைச்சோறு உடம்பில் ஊற ஊற அவளுக்கு வாழ்க்கை இனிக்கத் தொடங்கியது. வாழ்க்கையிலே என்ன என்ன சுகம் உண்டு என்பதை அவள் உலகத்திலே, தினந்தோறும் பார்க்கிறாளே! "நாமே நெல்லுக் குத்துவதும்

4