பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தெம்மாங்கு

நாடோடிப் பாடல்களில் அமைந்த மெட்டுக்கள் பலவற்றை இலக்கியப் புலவர்களும் சாகித்திய கர்த்தாக்காளும் எடுத்து ஆண்டிருக்கிறார்கள். மக்களுடைய உள்ளத்தைக் கவரும்படியான இயல்பு அத்தகைய மெட்டுக்களுக்கு இருப்பதுதான் காரணம். குறவஞ்சி என்ற பிரபந்திரி, கொண்டிச் சிந்து, கும்மி முதலிய பலவகையான பாடல்களெல்லாம் செந்தமிழும் இசையும் தெரிந்த புலவர்களுடைய சிருஷ்டித் திறமையால் உண்டானவை அல்ல. நாடோடியாக வழங்கும் பாடல்களில் கண்டவை: மலையிலும் வயலிலும் பாடும் பாடல்களிலே கண்டவை ; மக்களின் உணர்ச்சியை வெளிப்படுத்த நாடோடிப் பாவலன் இயற்கையோடு ஒட்டித் தாளத்தை அமைத்துச் செய்த பாடல்களை அடியொற்றிப் பாடியவை.

இந்த வகையில் இன்றும் தெம்மாங்கு நாடோடிப் பாடலாகவே இருக்கிறது. சங்கீதக் கச்சேரிகளில் துத்க - டாக்களினிடையே ஒன்றாகப் பாடப்படும் பதவி அதற்கு வந்திருந்தாலும், வண்டிக்காரனும் வழி நடப்பவனும் பாடும் பாட்டாகவே அது விளங்குகிறது.

நீண்ட சாலையில் இரவில் வண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் போகின்றன. பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும் அந்த வண்டிகள் மெல்ல மெல்ல நகர்கின்றன. மாடுகள் மெதுவாகச் செல்கின்றன. இயற்கையே தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த வண்டித் தொடர் 'கடக் கடக்' என்ற சத்தத்தோடு மோனத்தைக் குலைத்துச் செல்கின்றது. வண்டிக்காரர்களுள் ஒருவன் நன்றாகப் பாடத்