பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

கஞ்சியிலும் இன்பம்

ஒரு மரத்தை வெட்டி ஒரு
மாமரத்தை ஊஞ்சல் கட்டி
ஊஞ்சல் கீழே குந்தியிருக்கும்
ஆண்கிளியோ பெண்கிளியோ

ஆடவந்த பேய்க்கிளியோl

ஒரு இலுப்பை கீழே இருக்க
       கூவா கூவா முதற்பறவை
வடக்கே தெற்கே கோழிவெல்லும்
       வடக்கே ஒரு சிந்தாமணி
வகை வகையாப் பூப்பூக்கும்
       வரிவரியாப் பழம் பழுக்கும்
தின்னத் தின்ன நல்லாருக்கும்
       தேசம் எல்லாம் நிறைஞ்சிருக்கும்
கூவுது மயில் கூவுது பாரு
       கொண்டை முசலேறிக் கூவுது பாரு
ஆத்துக்குப் போற ஐயாசாமி
       தோப்பன் வரக் கூவுது!


கல்லு மலைமேலே கல்அடுக்கிக்
       கல்லாரக் கோயிலை உண்டுபண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி
       மருது வாறதைப் பாருங்கடி
மருது வந்தாலும் தேரோடாது
       மச்சினன் வந்தாலும் தேரோடாது
தேருக்குடையாரு குப்புசாமிப்பிள்ளை
       தேரோடுத் தோட்டம் தேரோடுது!

[இந்தப் பாடல்களை எனக்குச் சொன்னவள் மங்தைவெளி எல்லம்மாள்.]