பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

67


மத்தியில் ஆழ்ந்து உறங்குகிறான் என்றால் அது அவனது உழைப்புத் தந்த ஒய்வு அல்லவா. தூங்குவதற்கு இடம் தேவையில்லை. மனம்தான் முக்கியம். இந்த இரகசியத்தைத்தான் உல்லாசமான வாழ்விற்கு உறக்கம் முக்கியம் என்று சொல்ல வைத்தார்கள்.

இரவை வீணாக்காமல் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஆழ்ந்து உறக்கம் கொள்ளுங்கள். உடலில் புத்துணர்ச்சி பெற உறங்குங்கள். மனதில் பூரிப்பு வர உறங்குங்கள். ஆன்மாவில் ஆனந்தம் அரசாள உறங்குங்கள்.

‘தூங்காமல் தூங்கிச்சுகம் பெறுவது எக்காலம்’ என்று சித்தர்கள் சொன்னார்கள். அவர்கள் உடலால் தூங்கி, ஆன்மாவால் விழித்துக் கொண்டு இருந்தவர்கள். அந்தச் சுகம் அவர்களுக்குத் தெரியும். உங்கள் ஆன்மா உறங்கினால்தான் உடல் உறங்கும். மனம் உங்களை மகிழ்விக்கும்.

☐☐☐