பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

53


என்றது சரிதானே. இவன் தனக்கும் துரோகம் செய்து கொண்டு அடுத்தவர்கள் சாப்பாட்டையும் சேர்த்துச் சாப்பிடுவதால் சமுதாயத்துக்கு, துரோகியாகி விடுகிறானல்லவா? எனவே குடும்பஸ்தர்கள் இருவேளை சாப்பிடுவதே ஏற்புடையதாகும்.

உலகத்தில் உங்களைக் கெடுப்பது வேறுயாருமல்ல. நீங்களே உங்களைக் கெடுத்துக் கொள்கிறீர்கள். உங்களுக்குள்ளே உண்டாகும் ஆசையும், ஆவேசமும், வெறியும், வேகமும், பற்றும் படாடோபமும் பைசாசம் போல உங்களைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது.

ஆகவே சாப்பாடு சரியான ஏற்பாட்டிற்குள் வந்துவிட்டால், சகல ரோகமும் தீர்ந்து, சகல யோகமும் செழித்து வரும் என்பதையே இரகசியமாக சாப்பாடு என்ற சொல் சிந்துபாடிக் கொண்டு இருக்கிறது.

☐☐☐