பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

93



இயற்கையாக வாழுங்கள். இயற்கையோடு வாழுங்கள். இயற்கை என்பது இயல்பான செயல்களின் இலக்கணங்களாகும்.

தேக நலத்திற்கு துணைபோகும் காரியங்கள்தான் இயற்கையின் இலட்சணமாகும். இயற்கையைப்போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இறைவனின் எழுதாத கட்டளையாகும்.

இந்த அரிய கருத்துக்களை எல்லாம் மனதிலே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேக நலத்திற்கும், பலத்திற்கும் உதவுகிற எல்லாக் காரியங்களுமே நல்லொழுக்கங்களாகும். தேகத்தின் இனிய சுபாவத்தைக் கெடுக்கின்ற எந்தக் காரியமாக இருந்தாலும் அவை கெட்ட பழக்கங்களாகும்.

உணவு அவசியந்தான். அதை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நலம். அதிகமாகச் சாப்பிட்டால் உடம்புக்கு விஷம். அதுபோலத்தான் உறக்கமும், அயர்ந்து தூங்குவது ஒருவருக்குக் கை வந்த கலை. அந்தக் கலை கலைந்து போனால் அவர்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாக நேரிடும்.

கருமிக்குக் கிடைத்த காசை அவன் பத்திரமாகப் பாதுகாப்பதுபோல நீங்கள் உடம்பைப் பாதுகாக்க வேண்டும். நீண்டகாலம் குழந்தையே இல்லாமல் பின்பு குழந்தையைப் பெற்ற தம்பதிகள் தங்கள் குழந்தையைக் கொஞ்சுவதுபோல உங்கள் உடம்பை கொஞ்சுங்கள். தெய்வத்தை மதிப்பதுபோல தேகத்தை மதித்துப் போற்றுங்கள். இவைகளே உங்களை வளமாக வாழ-