பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

83



அவனை ஒழுக்க சீலன் என்று சொல்லலாம். உத்தமபாலன் என்றும் அழைக்கலாம்.

இயற்கைக்கு எதிர்ப்பதம் என்று செயற்கை என்ற சொல்லைக் கூறுவார்கள். செயற்கை என்பது இயற்கையை எதிர்த்துச் செயல்படுகிற எதிர்ப்பதமல்ல. அது இயற்கையோடு இணைந்த, இயைந்த சொல். இயற்கையோடு பின்னப்பட்டிருக்கும் ஒரு கட்டளைச் சொல்.

செயற்கை என்பது செயலின் ஒழுக்கம். அதுவே செயலின் வெற்றியாக அமைகிறது. ஒழுக்கம் என்பது ஒழுகுதல் என்ற வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது.

ஒரு காரியத்தைத் தொடர்ந்து விடாமல் செய்து கொண்டே வருவதைத்தான் ஒழுகுதல் என்பார்கள். இந்த ஒழுகுதல் என்பதுதான் ஒழுக்கு என்பதாக மாறி, அம்: என்ற அழகான சொல்லைச் சேர்த்துக் கொண்டு ஒழுக்கம் ஆயிற்று.

அப்படி என்றால் ஒழுக்கம் என்பதற்கு உடனே வருகிற நினைவுதான் என்ன? உடலுக்கு நன்மையும், திண்மையும், சுகமும், செளக்கியமும் கொடுக்கின்ற செயல்களுக்குப் பெயர் ஒழுக்கம் என்பது ஆகும்.

உடலைக் கெடுக்கின்ற, சுகத்தை அழிக்கின்ற செயல்களுக்கெல்லாம் 'இழுக்கம்' என்று பெயர். அதனால்தான் வள்ளுவரும், ஒழுக்கம் விழுப்பமான வாழ்வைத் தருவதால் அது உயிரினும் ஒம்பப்படும் என்றார்.