பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.நவராஜ் செல்லையா

65

யோசனை வந்தாலும் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்வதும் கிடையாது. அவனது எந்த உணர்வும் உறுத்துவதும் கிடையாது. வருத்துவதும் கிடையாது. அவன் சாப்பிடும்போதும், உறங்கும் போதும், நிம்மதியாகச் சாப்பிட்டு, நிம்மதியாக உறங்குகிறான்.

ஆகவே, பிரச்சினைகளை வேலை செய்யும் இடத்திலேயே விட்டுவிடுங்கள். வீட்டுப் பிரச்சனைகளை முற்றத்திலேயே விட்டு வையுங்கள். படுக்கை அறை பதமாக உறங்குகின்ற இடம்.

சாப்பாட்டு அறை உடலைக் சமர்த்தாக வளர்த்துக் காட்டுகிற இடம். இந்த இரு இடங்களிலும், உங்களுடைய பிரச்சனைகளைக் கொண்டு செல்லாதீர்கள்.

ஒரு சிலருக்குப் படுக்கையில் படுத்தவுடன்தான் பலப்பல சிந்தனைகள், பலப்பல நிந்தனைகள், பலப்பல உபாதைகள் படையெடுக்க ஆரம்பிக்கும். அப்படிப்பட்டவைகளால் உறக்கமும், மனதிலே ஏற்படுகிற துடிதுடிப்பும், சொல்லிலே ஏற்படுகிற படபடப்பும் அவர்களைப் பந்தாடிவிடுவதால் நொந்து போய் விடுகிறார்கள். புரண்டு புரண்டு படுத்து, வாழ்வையே வெறுத்துச் சலித்துப்போய் அவர்களை அறியாமலேயே உறங்கிவிடுவார்கள்.

உறங்கும் நேரம் போதாததால், விடியற் காலையிலே அவர்களது முகத்தைப் பார்த்தால், அவர்கள் முகம் வெளிறிப்போய்க் கிடக்கும். சில முகங்கள் வற்றிக் கிடக்கும்.