பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்


"உறங்குவதுபோலும் சாக்காடு, உறங்கி

விழிப்பதுபோலும் பிறப்பு"

என்றார்.

ஆனால், அவர் சொல்ல வந்தது சாக்காடு போலும் உறங்குவது என்பதே. அதாவது செத்தவர் கிடப்பதைப் போல உறங்க வேண்டும் என்றார். இதைத்தான் ஆங்கிலேயரும் (Dead Sleep) டெட் ஸ்லீப், என்றனர். அதை ஆழ்ந்த உறக்கம் என்பதாக டீப் ஸ்லீப் (Deep Sleep) என்றனர்.

குறைவான உறக்கம் உடலைச் சீர்குலைத்துவிடும். அரைகுறை உறக்கம் மனதை அலைபாய வைத்து அலைக்கழித்துவிடும். உறக்கம் வராமல் திண்டாடுகின்ற உங்கள் ஆன்மாவைப் பைத்தியம் பிடிக்க வைத்துவிடும்.

அதனால்தான் வள்ளுவர் செத்துக் கிடப்பதுபோல உறங்குங்கள் என்றார். நீங்கள் உறங்கி விழித்ததும் பாருங்கள் உங்கள் உடம்பிலே, புத்துணர்ச்சியும், பூரிப்பும், புதுத் தெம்பும் காண்பீர்கள். நீங்கள் இந்த உலகத்தையே பேரின்பமாக வரவேற்பீர்கள்.

அப்படியென்றால் எப்படித் தூங்குவது? எவ்வளவு நேரம் தூங்குவது? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. ஒரு அறிஞர் சொல்கிறார். 'உறங்கச் செல்லும் இடத்திற்குச் செல்வதற்கு முன்னும், உணவு உண்ணச் செல்லும் இடத்திற்குச் செல்லும் முன்னும் நீ முட்டாளாகப்போ' - என்கிறார். எப்படி முட்டாளாக உடனே ஆக முடியும் என்று கேட்கிறீர்களா? முட்டாளுக்கு எதையும் சிந்திக்கத் தெரியாது. அப்படி ஏதாவது