பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8



வி. ஆ! நீ நல்ல பெண்ணாச்சுதே-இன்னும் ஒரு மணி சாவகாசம் என்னைத் தனியா யிருக்க விடு.

ப. நான் வந்தது இன்றைக்கு-உங்கள் கலியாணமான -வெற்றி விழா-என்று ஞாபகப்படுத்த-

வி. ஒ! அதை நான் முற்றிலும் மறந்தேன் ! உன் கலியாணமான வெள்ளிவிழா தினம் வரும்பொழுது எனக்கு ஞாபக படுத்து-உனக்கு நல்ல பிரெசன்ட் (Present) வாங்கித் தருகிறேன்-இப்பொழுது போ வெளியே என் கண்ணல்ல. (மேஜையருகில் போகிறான்)

ப. (போகும் போது) தபால்காரன் இந்த தந்தியைக் கொடுத்துவிட்டுப் போனான்.

வி. அதைக் கொண்டுபோய் குப்பையில் போடு!-அல்லது அந்த மேஜையின் பேரில் போட்டுவிட்டுப் போ!(பத்மா போகிறாள்).

வி. அந்த காபியைக் குடித்தது எனக்குள் ஒரு புது யோசனையைப் பிறப்பித்திருக்கிறது-இதை யேன் நான் முன்பே யோசிக்கவில்லை? (கருப்பான கோலி குண்டைப் போன்ற ஒரு வஸ்துவை ஒரு குப்பியில் போட்டு அதன் பேரில் ஒரு திராவகத்தை ஊற்றுகிறான்) இது வற்றிப் போவதற்கு இருபது வினாடி பிடிக்கும் குறைந்த பட்சம், இதற்குள் குண்டுதான் வேண்டிய தூரம் போகும். (வெளியில் கதவைத் தட்டுகிற சப்தம்)

வி. அதோ பார் ! கான் கதவைத் திறக்க மாட்டேன் ! வருவது வரட்டும்! (வெளியில் பலமாய்க் கதவைத் தட்டுகிற சப்தம்) (வெளியிலிரு ந்து குரல்) டாக்டர் சார்! டாக்டர் சார் !

வி.பிசாசை நாம் நினைக்காவிட்டாலும் அது வந்து சேர்கிறது!-ஹீம் (கதவைத் திறக்கிறான்)

சுகன்மல் சவுகார் வருகிறான்.

சு. குட் ஈவ்னிங் ஆ! குட் மார்னிங்! முதலியார் சார்.