பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19



இம். இன்னும் இல்லை - ஆனால் அவன் சீக்கிரம் அதைத் தெரிவிக்கப் போகிறான் என்று எண்ணுகிறேன்.

இட். அதை வேறொருவருக்கு அவன் தெரிவிக்குமுன் அவனைக் கொன்றுவிடும் மார்க்கத்தை உடனே தேடு ! (அறையில் இருக்கும் டெலிபோன் மணி அடிக்கிறது) பாழாய்ப் போக! - (கேட்கும் கருவியைக் காதில் வைத்து) யார் பேசுகிறது ? - ஓ ஆம் - ருஷ்யா போர் முனையிலிருந்தா? - சரி! அவர்களா நம்மை எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள் ! உன்னுடைய துருப்புகள் என்ன செய்கிறார்கள்? - உம் - உன்னுடைய சைனிய நஷ்டம் அதிகமாக யிருக்கிறதா? இருந்தால் என்ன ? பாழாய்ப்போன மனுஷா - நீ என்ன பயங்காளியா! - இன்னும் மூன்று கோடி ராணுவம் மடிந்தாலும் பெரிதல்ல! - நீ மாஸ்கோவையாவது உடனே பிடிக்க வேண்டும்-இல்லாவிட்டால் இங்கு நீ உயிருடன் திரும்பி வரவேண்டியதில்லை ! அப்படி வந்தால்....உன் கதி என்னவாகுமென்று உனக்கு நன்றாய்த் தெரியுமே !-சரிதான் - (கேட்கும் கருவியை கீழே வைத்துவிட்டு) இதோ பார் ! இம்லர் ரஷ்யா யுத்த களத்திலிருந்து விபரீதமான சமாசாரம் வந்திருக்கிறது - நாம் ஜெயிக்க வேண்டுமென்றால், எப்படியாவது இந்த இரகசிய ஆயுதத்தை நாம் பெற வேண்டும். அதைப் பெறுவோமாயின் முன்பு, நம் எதிரிகள் நம்மை அழிப்பதைவிட்டு, நாம் அவர்களை யெல்லாம் அடியுடன் அழித்துவிடலாம். இந்த பிரிட்டிஷ்காரரையும் அமெரிக்கர்களையும் - மூன்று தினங்களுக்குள்ளாக ! நீ கூறுவதுபோல் அதற்குள்ளாகவே அவர்களை அதம்செய்து விடலாம். ஜெர்மனி தோல்வி யடைந்தால், நான் இறப்பதற்கு முன் இவ்வுலக முழுவதையும் அழித்துவிட்டு, இறக்கிறேன் !- ஏனப்பா? அந்தப் பாழாய்ப்போன இந்தியன் மற்றவர்களுக்கு இந்த இரகசியத்தை வெளியிடு முன் நீ அறிய மார்க்கமில்லையா ?

இம். இதில் கஷ்ட மென்னவென்றல் - மதராஸ் பட்டணத் தருகில் ஓர் கிராமத்தில் வசிக்கும் இந்த இந்தியனே, நாம் முதலில் பார்க்கவேண்டு மென்பதுதான்.