பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

யின் வெளிக் கதவு உடைக்கப்படுகிறது) ஓ! அவர்கள் வந்து விட்டார்கள் ! - பாழாய்ப் போக! - உன்னை முதலில் சுட்டுவிட்டு நான் சாகிறேன் (தன் கைத் துப்பாக்கியை உயர்த்துகிறான்)

(வென்ட்வொர்த் ஐந்தாறு அமெரிக்க கப்பல் வீரர்களுடன் விரைந்து வருகிறான், ஹெர்மன் கையிலிருந்த துப்பாக்கியை தட்டி வீழ்த்துகிறான்)

வெ. எல்லோரும் கைகளைக் தூக்குங்கள்! (ஜர்மானியரெல்லாம் அப்படியே செய்கின்றனர்) ஈசன் கருணை! அம்பட்டும் சமயத்தில் வந்தேன்! (விஸ்வம், அவனது தாய்த் தந்தையர், மனைவி, பிள்ளை,ஜெகதீசன் கருணை! என்று சொல்லி வணங்குகின்றனர்).

வெ. பசங்களா, இந்தப் பாழாய்ப்போன ஜர்மானியர்களை யெல்லாம் பிடித்துக்கொண்டு போய் காவலிலிருத்துங்கள். --ஜாக்கிரகையாக!- ஓ! ஹெர்மன் - நீயா இங்கு வந்திருக்கிறாய் -இவனை மாத்திரம் இங்கு சற்று வைத்திருங்கள் - ஒரு நிமிஷம்! (ஹெர்மன் தவிர மற்றவர்களை யெல்லாம் படைவீரர்கள் அழைத்துச்செல்கின்றனர்). நான் நினைத்தேன் அப்பொழுதே!-கொஞ்சம் பொறு! - (விஸ்வநாதனை அவன் பந்தங்களினின்றும் விடுவித்து, அவனது கோர காயப் படுத்தப்பட்டிருக்கும் உடலைப் பார்த்து) ஜகதீசனே! - என்ன கோரம்! ராட்க்ஷஸப் பிசாசே! ஹெர்மன்! இதற்கெல்லாம் பத்து மடங்கு நான் பழி வாங்குகிறேன்!

வி. வென்ட்வொர்த்! -நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்!

அ. ஐயா, நாங்கள் எல்லாம் உம்மை மனசாற வாழ்த்துகிறோம்! - என் பிள்ளையைக் காப்பாற்றியதற்காக!

வி. இவர்தான் என் தகப்பனார் - இவர்கள் தாயார்- இது என் மனைவி -இவன் என் பையன்.

வெ. உன் வீட்டிற்குப் போய், நான் அங்கு ஒருவருமில்லா திருப்பதைக் கண்டபோது இங்கப் பிசாசு உங்கள்