பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10



வி. என்ன ஆச்சரியம்! நான் என்ன கண்டு பிடிக்கப் போகிறேன்? இதைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

சு. எனக்கு ஒண்னும்-தெரியாது சார்! ஆனால் அதுக்கு ரெண்டு லச்சம் ரூபாய்க்கி ஒரு ஆபர் (Offer) இருக்குதுங்க - ஒரு லட்சம் உங்களுக்கு கொடுத்துடரேன். ஒரு லட்சம் நீங்க கொடுக்ணும் கடனுக்கு - எடுத்திக்ரேன் சார்-எல்லாம் சரி பூடுது.

வி. ‘சரி பூடு’து சரிதான்! நான் கண்டு பிடிக்கப் போகிறது இன்னது என்று அறியாமல் அதற்காக இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் எனும் புத்திசாலி யார் அவன் ?

சு. ஒரு-ஜப்பான்-மன்ஷன் !

வி. ஒரு ஜபானியனா! - ஓ! இது உதவாது ! ஏதோ தவறு நடந்திருக்கிறது! இதனுண்மையை நான் அறிய வேண்டும்! - யார் இந்த ஜப்பான் மனுஷன்?

சு. பட்ணத்துலே-பட்டுவிக்கரான் சார்-தெருவுலே.

வி. அவன்-இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கிறதாகச் சொல்கிறான் !

சு. பொயில்லா சார்-பொன் கொடுக்கரேன் இன்ரான் பொன் மார்க்சா!

வி. பொன்! மார்க்ஸ்! - இதை நான் உடனே நன்றாய் ஆறாய்ந்தறிய வேண்டும்! இதைப்பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாதென்று நான் இருந்தால்!-சரி சரி ! நான் காலஹரணம் செய்யக்கூடாது-சாவுகார், நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் ஜப்பான் மனிதனிடம், என் பிரயத்னம் ஒன்றும் பலிக்கவில்லை எல்லாம் கெட்டுப் போய்விட்டது, என்று சொல்லுங்கள்-இப்பொழுது நீங்கள் உடனே விடைபெற்றுக் கொண்டு போங்கள், எனக்கு நிரம்ப வேலையிருக்கிறது.