பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


இரவு வந்தது. இரவு மட்டுமா வந்தது. நிலவும் வந்தது; தென்றலும் வந்தது.

முத்தம்மாவுக்கு வெட்கம் வந்துவிட்டது. 'நாணம்’ என்ற சொல்லைத்தான் போடவேண்டும், இல்லையா? ஆமாம், நாணம் வந்துவிட்டது.

முருகேசன் கனத்துக்குக் கணம் தன்னையே இழந்து கொண்டிருந்தான்.

மதுக்கிண்ணம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சட்டத்தைத் தூர விலக்கி வைத்துவிட்டு; உலகத்திற்கு கண்ணாம்பூச்சி விளையாட்டுக் காட்டி விட்டு!

“மு...த்...த...ம்...மா..."

"......"

"ஏலே, பொண்ணு!"

"ம்...."

அவள் சிரிக்கவில்லை; அவன் சிரிக்கச் செய்து விட்டான்.

மேனியில் தவழ்ந்து கிடந்து, பிறகு சரிந்து விழுந்து, பிறகு தன் நிலை அடைந்து கொண்டிருந்தது சுங்கடிச் சேலை.

அமைதி.

விண் மீன்களின் சிரிப்பில் வெட்கம் வந்துவிட்டதோ இளசுகளுக்கு. வரட்டும், வரட்டும்.

“முத்தம்மா!...அந்தப் பயல் மாயாண்டி நம்ப ரெண்டு பேரையும் கூண்டோடே கைலாசத்துக்கு அனுப்பிப்பிடத்தான் திட்டம் போட்டிருந்தான். ஆன முடியல்லே! தெய்வமின்னு ஒண்னு இல்லாமையா?அந்தத் தெய்வம் இல்லையானா நம்ப ரெண்டு பேரும் இப்பிடி