பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

மொழிந்தார். அந்த வினாடியில் அவளுக்கு இரண்டு தெய்வங்கள் தோன்றினர். ஒன்று: உலகினை ஆண்டவன். அடுத்தது; அவளை ஆண்ட சோமசேகரன்!

நாடியம்மனையும் அங்காளம்மனையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அழைப்பிதழ்கள் சுற்றுலா புறப்படலாயின்.

‘அம்மா, எங்கழுத்திலே அத்தான் மூணு முடிச்சுப் போடட்டும். அப்புறம் பாரேன், கம்ம கஷ்டம் எல்லாம் பறந்து போயிடும்!’ என்று அடிக்கடி தேறுதல் அளித்து, துயரம் அழித்து வந்த அருமைப் புதல்வியை எண்ண எண்ண, கல்யாணி அம்மாளின் இதயம் இனித்தது. “...எங்குடும்ப கவுரவத்தைக் காப்பாத்தத்தான் எனக்கு இம்பிட்டுத் தொல்லைங்க. ஆனா, இதெல்லாம் எங்க கந்த சாமி அண்ணனுக்குப் பட்டுக் கோட்டைக்கு எட்டிப்பிடாமல் இருக்கவேனும்!...’

உருமப்பொழுது.

‘குடமிளகாய்’ சாப்பிட்டதற்கு அனுசரணையாக வெள்ளோட்டம் வந்த செஞ்சுடர்ச் செல்வன் திடுதிப்பென்று ‘ஊசி மிளகாய்’ கடித்தாற் போன்று உரைக்கத் தொடங்கினான்.

காலையில் நல்ல நேரம் கணித்து, மகளுக்குச் செய்திருந்த புது நகைகளைப் பூட்டி அழகு பார்த்து மகிழ்ந்த காட்சிக் கல்யாணி அம்மாளுக்குச் சரபோஜி மஹால் சிற்பத்தை நினைவூட்டிக் கொண்டேயிருந்தது. பெட்டகத்தில் நூறுரூபாய் நோட்டுக்களின் வாசம் வேறு அவளுக்கு இதம் அளித்த வண்ணம் இருந்தது. லாபநஷ்டக்கணக்கை எழுதிக் காட்டியவாறு இருந்த காலக் கணக்கனின் நியதிப் பொறுப்பு அவளது கண்களைப் பொசியச் செய்யத் தவறவும் இல்லை!