பக்கம்:உயிரில் கலந்தது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23


அவர் ‘ஊம் கொட்டுவதற்கும், கோசலை அம்மாள் அந்தக் குறிப்புச் சொல்லைச் செவிமடுத்து வந்து நிற்பதற்கும் கணக்குச் சரியாக இருந்தது.

கோசலை அம்மாள் வாணியின் கைமாலையை நோக்கி விட்டு, “என்னம்மா இது?’ என்று கேட்டாள். :

“உங்க மகனே மாலையும் கழுத்துமாப் பார்க்க வேணும்னு ஆசைப்பட்டீங்களே, அதுக்காகத்தான் இந்த மாலையை வாங்கியாந்தேன்!...” என்று பட்டவர்த்தனமாகப் பேசி விட்டாள் வாணி.

தாயும் தனயனும் சேர்த்து கூட்டு மொத்தமாகச் சிரித் தார்கள். அவுட்டுச் சிரிப்பு

“ரொம்பக் கெட்டிக்காரப் பொண்ணுதான் இந்த வாணி இல்லையா, அம்மா?”

“அது கெட்டிக்காரப் பொண்ணுய் இருக்கக் கொண்டு தானே எம் மனசையும் கெட்டியமாப் பிடிச்சுகிட்டு, இப்ப, உன்னுேட எ.கு மனசையும் கைப்பத்திறதுக்கு பிளான் கட்டி யிருக்குது!...ஏம்மா வாணி, நான் சொல்றது. நிஜம்தானே?...” ஆனால், அங்கு-அப்பொழுது அந்த வாணி நின்றால் தானே? - .

விடிைக்கு எப்போதுமே ஆயுள் கம்மி, மருந்துக் குப்பியுடன் வந்தாள் வாணி. கோசலை அம்மாளுக்கு வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. படுக்கையில் தஞ்சம் அடைந்தாள்.

நிச்சலனமான உள்ளத்துடன் தனியறையில் துழைந்த ஞானசீலனிடம் ஒட்டப்பட்டிருந்த ஒர் உறையை நீட்டிச் சென்றாள் வாணி. உறைப் பரப்பில் எந்த விலாசமும் இல்லை! . .