பக்கம்:உயிரில் கலந்தது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

}}

‘இது ஏதேடா வம்பாகிவிட்டது என்று எண்ணி, தலை நிமிர்ந்தார் ஞானசீலன்.

புஷ்பவல்லி பட உருக் கொண்டு காட்சி கொடுத்தாள்! சாப்பிட்ட சாப்பாடு எங்கேதான் போயிற்றாே?

ஒவ்வொர் இடத்திலும் இப்படி பெண் உருவில் விதி என்னைப் பயம் காட்டுகிறதா? இல்லை, என் மனச் செருக்குக்குச் சவால் விடுகிறதா? இல்லை, என்னுடைய ஒருநிலைப்பட்ட போக்கை ஒருநிலைப்படுத்த இப்படிப்பட்ட பெண்களாகத் தோன்றிடச் செய்து, விதி என்னும் மாயை என்ன எள்ளி நகையாடுகிறதா?

ஒரு மாதம் தவனே கோரிப் பெற்றுக்கொண்ட திருப்தி: யுடன் அங்கிருந்து கால் நடையாகவே நடந்து சென்றா ச் ஞானசீலன்.

அறையை அடைந்ததும், இருபத்தைந்து காசு பஸ் செலவு மிச்சம் என்பதையும் ஒரு பாக்கெட் பர்க்லி சிகரெட்நஷ்டம் என்பதையும் உணர்ந்தவராக, குளிர் நீரில் ஒரு குவளை எடுத்துக் குடித்துவிட்டு, மொட்டை மாடியில் தன்னந்தனி யாக உட்கார்ந்திருந்தார் ஞானசீலன்.

மல்லிகேஸ்வரர் ஆலயம் தெரிந்தது. * மண்துலங்கச் சிரித்த விண்மீன்கள் தெரிந்தன.

உடலுக்குரித்தான சுதந்திரம் கட்டு அவிழ்த்துப் புறப் பட்ட உரிமையுட்ன் அவர் மனம் வெகுவாகப் போராடிக் கொண்டிருந்தது.

போராட்டம் என்றால், உரிமைப் போராட்டம் உறவுப் போராட்டம். - ஒருபுறம் தவசீவி! அதோ கமலாட்சி!

இதோ, புஷ்பவல்லி!