பக்கம்:உயிரில் கலந்தது.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

அமர்ந்தார்கள். டிராயிங் மாஸ்டரும் சிறந்த எழுத்தாளருமான லட்சுமணன், லேடி டாக்டர் மகன், எத்திராஜ், கணித ஆசிரியர் சண்முகசுந்தரம், பாப்புலர் டயர் கம்பெனி மானேஜர் ஆகிய 'ஜமா' சேர்ந்தது. அவரவர்கள் விடை பெற்றதும்: வழக்கமாகச் சந்திக்கும் கலெக்டர் ஆபீஸ் பெண்ணையும் சந்தித்தார்கள். மெளனமான குறுஞ்சிரிப்பு இடைவழியில் வழிந்தது!

வீட்டுக்கு வந்ததும், இருட்டியது. வீட்டில் மிதந்த ஒளியில், தம் தோல்பையைப் பிரித்தார் ஞானசீலன்,ரெயில் பெட்டியில் கிடைத்த புத்தகத்தைப் புரட்டினார். “பெங்குவின் புத்தகம்" அது. அதைப் புரட்டியபொழுது, ஒரு கார்டு இருக்கக் கண்டார்.'குந்தவ்வை’ என்ற கதாசிரியைக்கு கதை தேர்வு பெற்ற விவரம் சொல்லி தாம் அனுப்பிய கடிதம் அது. ‘அது இங்கே எப்படி வந்தது?...யார் இந்தக் குந்தவ்வை?..’

பையைப் பிரித்த அவர் கையில் டைரி ஒன்றும் தட்டுப்பட்டது. அது வாணியின் டைரி!...

புரண்ட நாட்குறிப்பின் தாள்களிலே ஞானசீலனது நெஞ்சின் அலைகளும் புரண்டன; நெஞ்சின் அலைகளிலே விழிகளது சுடுநீரின் அலைகளுமா புரளவேண்டும்?...

14. ஸ்ரீ ராமகிஷ்ணரும் மஹாத்மாவும்!

னிதனை எண்ணங்கள் ஆளாகின்றன.
அதுபோல, எண்ணங்கள் மனிதன் ஆளாகிறான்.
காலத்தினல் மனிதன் சிறக்கிறான்.
மனிதனல் அவனது காலம் சிறக்கிறது.

காலத்தைக்கொண்டு மனிதனும், எண்ணங்களினால் அவனது மனிதத் தன்மையும் வரலாற்றுச் சிறப்புப் பூண